சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர். குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2013ம் ஆண்டுக்கு முன்னதாக படகில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர விசாக்களில் தங்கி உள்ள அகதிகளின் குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களுக்கு குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்படும் என்ற முந்தைய உத்தரவில், ஆஸ்திரேலிய அரசாங்கம் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 


மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ


படகில் வழியாக வந்து அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கும் தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் அல்லது பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாக்களில் உள்ளவர்களுக்கும் இந்த கொள்கை மாற்றம் பொருந்தும் என்று கூறப்படுகிறது.


தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், தற்போது தற்காலிக விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசாக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் ஆளும் கட்சியாக உள்ள தொழிற்கட்சி மேற்கொண்டு வருகிறது. 


அதே சமயம், 2013ம் ஆண்டு ஜூலை 19ம் தேதிக்கு பின்பு படகில் வந்த அகதிகள் விவகாரத்தில் எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்த அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையிலேயே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள்


2013 ஜூலை 19 காலக்கெடு ஏன்?


ஆஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமரான கெவின் ரூட், 2013 ஜூலை 19ம் தேதிக்கு பிறகு படகில் வரும் எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அறிவித்திருந்தார். அதன் முதல், இந்த காலக்கெடுவுக்கு பின்பு படகில் வந்த அகதிகள் பிரித்து, அதற்கு ஏற்ப அணுகப்பட்டார்கள். இந்த அகதிகள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக இன்றும் கடல்கடந்த தடுப்பு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  


இந்த சூழலில், ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்சை சந்தித்த அகதியான மொஸ்தபா அசிம்தபர், லேபர் அரசாங்கம் தனது கொள்கையை மாற்றாது என அமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் மொஸ்தபா போன்று 2013 ஜூலை 19 பிறகு வந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கும் அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கப்படாது எனத் தெரிய வந்துள்ளது. 


“கடந்த தசாப்த கால அரசியல் இப்போது பொருத்தமானதாக இல்லை. ஆனாலும் அதற்கான விலையை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், இந்த தொழிற்கட்சி அரசாங்கம் எங்கள் உரிமைகளை  காக்காது,” என அந்த அகதி குறிப்பிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ