அபுதாபியில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்ற மதுரையை சேர்ந்த ஊழியர்
கடந்த ஒன்பது ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் மீனாட்சிசுந்தரம், கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், ஒவ்வொரு வாரமும் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியை நடத்துகிறது. அந்த வகையில் இந்த வாரம் நடத்த லாட்டரியில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் 5 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் 1.05 கோடி ரூபாய்) பரிசு வென்றுள்ளார். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் மீனாட்சிசுந்தரம், கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் 2,500 திர்ஹம் சம்பளம் பெற்று வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அபுதாபி பிக் டிக்கெட்டில் கலந்து கொள்கிறார். எப்போதும் தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள மீனாட்சி சுந்தரம், இந்த முறை தனியாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தாயகம் வந்து தனது குடும்பத்துடன் தங்கிய பின், துபாய் சென்ற இவர், தனது மகனின் பிறந்தநாளுக்கு ஏற்ற வகையில் உள்ள எண் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
மேலும் படிக்க | மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்
மகனுக்கு கடந்த 24ம் தேதி ஒரு வயது ஆகிய நிலையில், மீனாட்சி சுந்தரம் தனது மகனின் பிறந்த தேதி 24-5-2021 முதல் மூன்று இலக்கங்களில் உள்ள எண்கள் கொண்ட லாட்டரி டிக்கெட் எடுத்துள்ளார். மே 2ம் தேதி 065245 என்ற டிக்கெட்டை வாங்கினார். அதுதான் அவருக்கு இப்போது அதிர்ஷ்டத்தைக் கொட்டிக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் கூறுகையில்,"என் மனைவியும், மகனும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்ததில்லை. தற்போது இந்த பணத்தில் எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன். எங்கள் குடும்பம் மிக எளிய குடும்பம். நான் தொடர்ந்து 5 வருடங்களாக அபுதாபி பிக் டிக்கெட்டில் கலந்து கொண்டு வருகிறேன். என மகனின் பிறந்த தேதியின் அடிப்படையில் வாங்கிய டிக்கெட்டில் பரிசு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் வாராந்திர 20 மில்லியன் திர்ஹாம் மற்றும் 10 லட்சம் திர்ஹாம் குலுக்கல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மீனாட்சி சுந்தரம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR