ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கும் விடுதிகளின் கட்டணத்தை அதிகப்படுத்தி அவர்களது பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடாது என ஃபுஜைராவில் உள்ள விடுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் அமீரகத்தில் பல ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ள. இந்த வாரம் நாட்டைப் பாதித்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்களது சில கிளைகள் இப்போது நாள் முழுவதும் (24x7) திறந்திருக்கும் என்று ஒரு பெரிய சில்லறை விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு செய்தியில், இந்த மழை காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி சேவைகளும் கிடைக்கும் என்று  ஷார்ஜா கோ-ஆப் கூறியுள்ளது.


மேலும் படிக்க  UAE வாழ் தமிழர்கள் கவனத்திற்கு! சாலையில் பெருகும் வெள்ளம்; எச்சரிக்கும் அரசு 


"எங்கள் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கிளைகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக இப்போது 24 மணிநேரமும் திறந்திருக்கும்," என்று நிறுவனம் தனது இடுகையில் தெரிவித்துள்ளது. 


போதுமான அளவு உணவு மற்றும் அடிப்படை பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் அணிதிரளும் வீடியோவையும் நிறுவனம் வெளியிட்டது.


இதுபோன்ற ஒரு பேரழிவின் போது சமூகத்திற்கு உதவுவதில் நிறுவனம் எடுத்துள்ள முயற்சிகளை மக்கள் பாராட்டினர்.  இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு தேவையான உதவியை செய்வதற்காக பலர் நிறுவனத்துக்கு நன்றியும் தெரிவித்தனர். "இது மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது, இதனால் மக்களுக்கு நல்ல சேவை கிடைத்துள்ளது” என்று கடையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் கமெண்ட் செய்டுள்ளார். 


நாட்டின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்வதால், சில சாலைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் சில பகுதிகளை பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலையற்ற வானிலை காரணமாக கோர் ஃபக்கனில் உள்ள ஷீஸ் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. கடலோர நகரமான இந்த இடத்தின் நகராட்சி, மேலும் அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடப்பட்டிருக்கும் என்று கூறியது.


நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம் என ஷார்ஜா காவல்துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிவுரையில், அடைமழை மற்றும் திடீர் வெள்ளம் நிற்கும் வரை தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், சில இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | UAE Jobs: ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ