நீ வேணா சண்டைக்கு வாடா.. WWF வீரராக மாறிய பூனை!

பூனை ஒன்று டிவியில் ஒளிபரப்பாகும் குத்து சண்டை நிகழ்ச்சியை பார்த்து அதேபோல சண்டை போட முயற்சிக்கும் காட்சி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 29, 2022, 11:01 AM IST
  • குத்துசண்டை வீரராக மாறிய பூனை.
  • டிவியை பார்த்து அதே போல சண்டையிடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நீ வேணா சண்டைக்கு வாடா.. WWF வீரராக மாறிய பூனை!  title=

90'ஸ் கிட்ஸ் பலரின் விருப்பமான நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குத்துசண்டை, இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உண்டு.  இன்று வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பவர்கள் பலர் உண்டு, பல வீடுகளில் இந்நிகழ்ச்சியை பார்த்து இதேபோல சண்டை போட்டு பார்த்தவர்களும் பலருண்டு.  அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியை மனிதர்கள் மட்டும்தான் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்கள் என நினைத்தால், அதனை விலங்குகளும் பார்த்து ரசிக்கிறது என்பது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது.  பல க்யூட்டான செயல்களை செய்யும் பூனை தான் இந்த நிகழ்ச்சியோடு ஒன்றிணைந்து இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

cat

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

இந்த ரசிக்கும்படியான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒன்றான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ள டிவியில் குத்துச்சண்டை நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது, அதில் இரண்டு போட்டியாளர்கள் மும்முரமாக சண்டை போட்டு வருகின்றனர்.  டிவிக்கு நேரெதிரே உள்ள நாற்காலி ஒன்றில் பூனை ஒன்று நின்றுகொண்டு இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.  அந்த பூனை நிகழ்ச்சியை பார்ப்பதோடு மட்டும் நிறுத்தவில்லை, டிவியில் அவர்கள் எப்படி சண்டைபோட்டு கொள்கிறாரோ அதேபோல இந்த பூனையும் தனது கைகளை சண்டை செய்வது போல வேகமாக கையை வீசுகிறது.  இந்த வீடியோவில் அந்த பூனை தன்னை ஒரு குத்துச்சண்டை வீரராக நினைத்துக்கொண்டு செய்யும் செயல்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது.

 

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஜூலை 28ம் தேதி ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவிற்கு இதுவரை பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளனர், மேலும் இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News