UAE Jobs: ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுவோருக்கு நற்செய்தி!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை வாய்ப்பு குறித்து Cooper Fitch என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2022, 05:38 PM IST
  • அபுதாபி, ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் பணி அதிகரித்துள்ளது.
  • கூப்பர் ஃபிட்ச் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
UAE Jobs: ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுவோருக்கு நற்செய்தி! title=

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கூப்பர் ஃபிட்ச் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு அறிக்கைக்காக வெளியிடப்பட்ட வளைகுடா வேலைவாய்ப்பு குறியீட்டின் படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்புகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக அதிகரித்துள்ளன.

ரியல் எஸ்டேட், முதலீடு மற்றும் வங்கி ஆகிய துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவகியுள்ளதாக, கூப்பர் ஃபிட்ச் என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது. பொதுத் துறையில் வேலை வாய்ப்புகள், வளைகுடா நாடுகள் முழுவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. அபுதாபி, ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் பணி  அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்; அரசு வெளியிட்டுள்ள தகவல்

ஐக்கிய அரபு  அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் குவைத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ள துறைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

முதலீடு - 17%

ரியல் எஸ்டேட் - 14%

வங்கி - 14%

சட்டத்துறை - 13%

பொதுத்துறை - 8%

உற்பத்தி - 8%

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் - 7%

டிஜிட்டல் & டேட்டா - 6%

நிதித்துறை - 6%

சைபர் பாதுகாப்பு - 4%

கன்சல்டண்ட்- 4%

விநியோகச் சங்கிலி - 4%

மென்பொருள் மேம்பாடு - 2%

உள்நாட்டு சட்டத்துறை - 2%

முக்கிய குறிப்பு: ஒரு வேலையைத் தேடும் போது, ​​ஒரு வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், விடாமுயற்சியைச் செய்வது முக்கியம். உங்கள் ஆஃபர் லெட்டரைப் பெற்றவுடன், நீங்கள் போடும் ஒப்பந்தத்தின் அனைத்து அடிப்படை விவரங்களும் அதில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் போது உங்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் இவை UAE தொழிலாளர் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு

மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News