Astro Tips: ஏழரை சனியால் கஷ்டமா? எளிய பரிகாரம் இது! வீட்டில் குதிரை லாடம் வைக்கவும்
வீட்டில் செழிப்பு இல்லாவிட்டால் அல்லது பணப்பெட்டியில் பணம் தங்கவில்லை என்றால், கறுப்புக் குதிரையின் லாடத்தை வீட்டின் பணப்பெட்டியில் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் மிக விரைவில் அற்புதமான பலன்களை அனுபவபூர்வமாக உணரலாம்
வீட்டில் குதிரையின் லாடத்தை எப்படி வைக்கவேண்டும்? கருப்பு குதிரையின் லாடம் வீட்டின் பிரதான வாசலில் இருந்தால் எந்தவிதமான எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் வராது என்பது நம்பிக்கை. எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க இது நல்ல வழியாகும்.
சனியின் கோபத்தில் இருந்து விடுபட இதை செய்யுங்கள். ஜோதிட ரீதியாக, கருப்பு குதிரையின் கால் பகுதி சனியின் மகாதசை மற்றும் கோபத்திலிருந்து விடுபட உதவுகிறது என்று கூறப்படுகிறது. குதிரை லாடத்தை வீட்டின் வாசலில் மாட்டி வைத்தால் வீட்டில் நிம்மதி பிறக்க.
ஜோதிடத்தின் படி, வேலை அல்லது வியாபாரத்தில் சிக்கல்களை எதிர்கொண்டால், குதிரை முடியால் செய்யப்பட்ட ஆபரணத்தை அணியுங்கள். இதைச் செய்வதன் மூலம் உங்கள் வேலை அல்லது வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.