யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: இந்த பானங்களை குடிச்சா ஈசியா சரி செய்யலாம்
இஞ்சி நீர் - இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற கலவை உள்ளது. இது யூரிக் அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
எலுமிச்சை நீர் - எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். இது தவிர, எலுமிச்சை நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, இது யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு மிகவும் முக்கியமானது.
மஞ்சள் பால் - மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது யூரிக் அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மூட்டு வலிக்கும், உடலில் ஏற்படும் பிற வலிகளுக்கும் இது நிவாரணமாக அமையும்.
செர்ரி ஜூஸ்- செர்ரியில் அந்தோசயனின் என்ற கலவை உள்ளது. இது யூரிக் அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்க உதவும். கீல்வாதத்தில் இருந்து நிவாரணம் வழங்க செர்ரி சாறு உதவுகிறது. மூட்டு வலி நோயாளிகள் தினமும் செர்ரி சாறு குடிக்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் - ஆப்பிள் சைடர் வினிகர் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பானமாகும். ஆனால், ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது அதிக அமிலத்தன்மை கொண்டது. ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை பருகிவது நல்லது.
துளசி நீர்- பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட துளசி நீர் யூரிக் அமில அளவையும் குறைக்க உதவும். இதனை தினமும் குடிப்பதால் யூரிக் அமிலம் குறைவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும்.
க்ரீன் டீ- க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் யூரிக் அமிலத்தைக் குறைக்க பெரிய அளவில் உதவுகின்றன. இதன் மூலம் இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படவும் கிரீன் டீ உதவுகிறது.
புதினா நீர் - புதினாவில் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து புதினா தண்ணீர் தயாரிக்கலாம். இதை தினமும் குடித்து வந்தால், யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும்.
கொத்தமல்லி நீர் - கொத்தமல்லியில் யூரிக் அமிலத்தை குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. கொத்தமல்லி தழையை தண்ணீரில் கொதிக்க வைத்து கொத்தமல்லி தண்ணீர் தயாரிக்கலாம். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.