Mushroom For Cancer Patients: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காளான் சாப்பிடலாமா? இதை சாப்பிடுவதால் என்ன ஆகும்? இங்கு பார்ப்போம் வாங்க.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை அவர்களின் டயட்டில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது எதனால்? இங்கு பார்க்கலாம்.
காளான்களில் காணப்படும் சில சத்துக்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றல் அளிக்கும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது, மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாக இருக்காது என்றாலும், இதிலும் சில மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால், அவர்களின் டயட்டில் கண்டிப்பாக காளானை சேர்த்துக்கொள்ள வேண்டுமாம்.
காளான்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கான இன்னொரு காரணம், இதில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்திகள் என்று கூறப்படுகிறது. இதை எடுத்துக்கொள்வதனால், புற்றுநோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தி வலுபெறுமாம். மேலும், இதை எடுத்துக்கொள்வதனால் உடலில் எலும்புகளும் வலுபெறும் என கூறப்படுகிறது.
புற்றுநோயுடன் தொடர்புடையது, நாள்பட்ட அழற்சி பாதிப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். காளானில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது, உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும் என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிறது. காளான்கள் புற்றுநோய் வளர்ச்சிக்கு குறைவான உகந்த சூழலை உருவாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காளான்களில் செலினியம், வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பண்புகள் நிறைந்துள்ளன. இது, உடலில் பாதிப்படைந்துள்ள செல்களை சரி செய்ய உதவுவதாகவும், மருத்துவ ஆராய்ச்சிகள் சில குறிப்பிடுகின்றன. புற்றுநோய் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, அவர்களின் ஆரோக்கிய செல்கள் வளரவும் காளான் உதவுகிறது.
காளான்களில் குறைந்த கலோரிகள் உள்ளன. இது, ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆதாரமாக உள்ளது. இதில், வைட்டமின் பி, டி போன்ற சத்துக்களும் உள்ளன. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சையின் பக்க விளைவுகள் அல்லது பசியின்மை காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலினை அளிக்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மட்டுமன்றி, மன நலனும் அதிகமாக பாதிக்கப்படும். இது, உடலில் அனைத்து செல்களையும் சமநிலைப்படுத்தவும் உதவும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, அனைவருமே காளானால் பயனைடைவர் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காளான்களை அனைவரும் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீரான மற்றும் மாறுபட்ட குடல் நுண்ணுயிரியை பராமரிப்பது புற்றுநோய் நோயாளிகள் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானதாக கூறப்படுகிறது.