சுகர் அதிகமா இருக்கா? கன்ட்ரோல் செய்ய இந்த விதை பழங்கள் சாப்பிடுங்க
வெந்தய விதைகளில் இயற்கையாகவே ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் சக்தி உள்ளது. நார்ச்சத்து மிகுந்த வெந்தய விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க உதவுகிறது.
சியா விதை: சியா விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக நிரூபணமாகி உள்ளது. ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்த விதைகள் உதவுகின்றன.
சப்ஜா விதை: சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் உதவக்கூடிய விதையாகும்.
நாவல் பழம்: நாவல் பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தின் விதைகளில், ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன, அதனால்தான் நாவல் எப்போதுமே நீரிழிவு நோய்க்கான சிறந்த பழமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.