NPS: ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த மாதம் அரசு வழங்க உள்ள மிகப் பெரிய பரிசு!

Sun, 07 Aug 2022-6:04 pm,

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இப்போது NPS இல் உத்தரவாதமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறது. இந்தத் திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் பயனடைவதோடு, தேசிய ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

செப்டம்பர் 30 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்: பிஎஃப்ஆர்டிஏ தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யாய இது குறித்துத் தெரிவிக்கையில், “தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த் திட்டம் தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதாவது, முதலீட்டாளர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவர்ச்சிகரமான தொகையைப் பெற வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான வருமானம் கிடைக்க முயற்சி: தொடர்ந்து பேசிய பந்தோபாத்யாயா, கடந்த 13 ஆண்டுகளில் தேசிய ஓய்வூதிய முறையை வலுப்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 10.27 என்ற விகிதத்தில் கூட்டு வட்டி கொடுத்துள்ளோம்; நாங்கள் எப்போதும் முதலீட்டாளர்களுக்கு பணவீக்கம் காரணமாக பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், வருமானத்தை வழங்குகிறோம்," என்று அவர் கூறினார்.

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து, PFRDA தலைவர் கூறுகையில், இந்த பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு வரும் அரசு, முதலீட்டாளர்கள் எந்த விலையிலும் பாதுகாப்பான வருவாயைப் பெறக்கூடிய வகையில் NPS ஐ வடிவமைத்துள்ளோம்.

தற்போதுள்ள ஓய்வூதிய நிதி 35 லட்சம் கோடி: நாட்டில் தற்போதுள்ள ஓய்வூதிய நிதியைப் பற்றி பேசினால், அது ரூ.35 ஆயிரம் கோடி. இந்த சதவீதத்தில் 22 சதவீதம் அதாவது மொத்தம் ரூ.7.72 லட்சம் கோடி NPS இல் உள்ளது. அதே நேரத்தில், EPFO ​​40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link