இந்த வார கிரக அமைப்பு யாருக்கு சாதகம்? கன்னிக்கு சூப்பர் சிம்மத்துக்கு ஜெயம்
கன்னி ராசிக்காரர்களின் வேலைகள் இந்த வாரம் எளிதாக முடிவடையும். பணிச்சுமை அதிகமாக இருக்கும், ஆனால் அதை ஒரு சுமையாக கருத வேண்டாம். பணியிடத்தில் பேசப்படும் வதந்திகளில் இருந்து விலகி இருந்தால் பிரச்சனை இருக்காது
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பணம் எப்படியும் வந்து சேரும். சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். புதிய வேலைகளைத் தொடங்கலாம்.
இந்த வாரம் ரிஷப ராசியினருக்கு நேர்மறையான சிந்தனை இருந்தால் நிம்மதி கிடைக்கும் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்களை கவனித்துக் கொண்டால், நீங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். வேலை அதிகமாக இருக்கும், அதை மனதில் வைத்து திட்டமிடுங்கள்.
இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்என்ற சூழல் மீன ராசிக்காரர்களுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மனம் அமைதியாக இருக்கும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், அது எதிர்காலத்தில் பலன்களைத் தரும். உங்கள் அடக்கமான குணம் மக்களை உங்களை நோக்கி ஈர்க்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமும் விவேகமும் அருமையாக வெளிப்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு முன் யோசித்து செயல்படவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். கோபமான உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நன்றாக யோசித்து நடந்து கொள்ளுங்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம், இது நன்மைகளைத் தரும். திருமண யோகமும், காதல் யோகமும் கைகூடும்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். வேலையுடன், உடற்பயிற்சிகளிலும் நல்ல உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும். தொழிலில் வெற்றி கிடைக்கும்.
இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு சோதனையான காலம். தன்னம்பிக்கை குறைந்து விடாமல் செயல்படுங்கள், உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டு வேலை செய்தால் மன அழுத்தத்தைத் தவிர்க்ககலாம்.
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனை இருக்கலாம். தொழிலில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு நிம்மதியான வாரம் இது. அதிர்ஷ்டத்தின் உதவியால் பெரிய பிரச்சனையில் இருந்து வெளியே வருவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.