Demat account: உங்கள் டிமேட் கணக்கை எவ்வாறு மூடுவது

தேவையான சில ஆவணங்களை சேகரித்து வங்கி கிளையில் சமர்ப்பிக்கவும், உங்கள் டிமேட்  கணக்கு 7-10 நாட்களுக்குள் மூடப்படும்

டிமேட் கணக்கு என்பது முக்கியமாகப் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காகத் தேவைப்படுகின்றது. இப்படிப் பட்ட டிமேட் கணக்கிற்கு வருடாந்திர மற்றும் நிர்வகிப்புக் கட்டணங்கள் உண்டு. ஒரு வேளை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில்லை என்று முடிவு செய்கின்றீர்களா... அப்படியானால் டிமேட் கணக்கை எப்படி மூடுவது என்று தெரியுமா..? அதன் முழு விவரத்தை இங்கே பார்போம். 

1 /4

டிமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் முதலீட்டுப் பங்கேற்பாளர் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இதற்குப் பின்வரும் விவரங்கள் தேவைபபடும். டிபி எனப்படும் முதலீட்டுப் பங்கேற்பாளர் மற்றும் கிளையன்ட் ஐடி, பெயர் மற்றும் முகவரி விவரம்,  கணக்கை மூடுவதற்கான சரியான காரணம், கணக்கை மூடுவதற்கான கோரிக்கை படிவம்.

2 /4

டிமேட் கணக்கில் ஏதும் பணம் இருந்தால் டெலிவரி அறிவுறுத்தல் சீட்டு போன்றவற்றைப் பயன்படுத்திப் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

3 /4

டிமேட் கணக்கை மூடுவதற்கான கோரிக்கையை அளித்த உடன் 7 முதல் 10 வேலை நாட்களில் உங்கள் கணக்கு மூடப்படும். டிமேட் கணக்கை மூடக் கட்டணம் ஏதும் இல்லை.

4 /4

டிமேட் கணக்கை மூடும் போது நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் அதனைக் கட்டி முடித்த பிறகே முழுவதுமாகக் கணக்கை மூட முடியும்.