பெண் குழந்தைகளை சுயசார்பு மங்கையாய் மாற நிதி சுதந்திரம் அளிக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!
பெண் குழந்தைகளை தன்னிறைவு கொண்டவர்களாக மாற்ற மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட Sukanya Samriddhi Yojana எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்
பெண் குழந்தை பிறந்ததுமே, அதன் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் கனவு காண தொடங்கிவிடுவார்கள். அவர்களின் எதிர்கால கல்வி, திருமணம் என செலவுகளுக்காக சேமிக்கத் தொடங்கும் பெற்றோரின் நலனுக்கான திட்டம் இது.
10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளின் பெயரில் தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட வேண்டும். தபால் நிலையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை தொடங்கலாம்.
ஒரு நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குழந்தையின் பிறப்பு சான்றிதழை கொடுத்து தான் இந்தத் திட்டத்தைத் தொடங்க முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜ்னா திட்டத்திற்கு தற்போது 8.2 வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்திற்கான வட்டியில் அரசாங்கம் அவ்வப்போது மாற்றங்களையும் செய்யும்
குழந்தைக்கு 15 வயது எட்டும் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதன் பின்னர், 18 வயது எட்டியதும் 50 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள முடியும். பின்னார் கணக்குத் துவங்கி 21 ஆண்டுகளுக்கு போராக்கு மொத்த தொகையும் எடுத்துக் கொள்ள முடியும். பெற்றோர், இந்த திட்டத்தின் கீழ் 2 மகள்களுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.
மாதம் 5 ஆயிரம் முதலீடு
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ. 9 லட்சமாக மாறும், கணக்கு முதிர்ச்சியடையும் போது, தற்போதைய வட்டி விகிதத்தின்படி ரூ.27,73,059 உங்கள் மகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.