புகைப்படங்கள்: சென்னை ஐசிஎப்-லிருந்து டெல்லிக்கு புதிய அதிநவீன ரயில்

1 /10

பையோ கழிப்பறை: அனைத்து புதிய MEU ரயில்களில் உயிர் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் அசுத்தம் ஏற்ப்படாமல் தவிர்க்கலாம். இந்த வசதி பழைய MIU ரயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 /10

இந்த இரயிலில் இரட்டை நெகிழ் கதவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் இருந்து திறக்கும் படி(இடது மற்றும் வலது) பொருத்தப்பட்டு உள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. 

3 /10

ஒரு புதிய MEU ரயிலில் ஓட்டுனரிடம் பேசும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலையின் போது "முஸாஃபிர் டாக் பேக்" மூலம் ரயிலின் ஓட்டுநரிடம் தங்களுக்கான பிரச்சனை குறித்து பேசலாம்.

4 /10

புதிய MEU ரயில்களின் உள்ளே ஆய்வு செய்யும் ரயில்வே அதிகாரிகள்.

5 /10

ஜி.பி.எஸ் சார்ந்த தகவல் அமைப்பு புதிய MEU ரயிலில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உதவியுடன், எந்த சந்திப்பில் ரயில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு வரப்போகிறது போன்ற தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

6 /10

ஒரு MEU புதிய ரயில்கள் பழைய MEU ரயிலை விட 10 சதவீதம் அதிக பயணிகள் பயணிக்க முடியும். பழைய MEU ரயிலில் சுமார் 2600 பயணிகள் செல்லலாம். அதே நேரத்தில் புதிய MEU ரயில்களில் 2,800-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பது சிறப்பு.

7 /10

புதிய MEU ரயிலின் வேகம் 130 கி.மீ. ஆகும். இந்த ரயில்கள் முக்கிய பாதையில் இயக்கப்படும். இதுவரை பழைய MEU ரயில் வேகம் மணிக்கு 110 கிமீ. வேகத்தில் மட்டும் இயங்கி வருகிறது.

8 /10

தற்போதுள்ள MEU ரயிலின் ஒரு வகுப்பில் (AC/SL/2nd Class) இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் வசதி இல்லை. ஆனால் புதிய MEU ரயிலில் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்ல முடியும். இது பயணிகளுக்கு சிரமத்தை குறைத்துள்ளது.

9 /10

புதிய MEU ரயிலில் இருக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன. புதிய ரயில் சுகமாக அமர்வதற்க்கு ஏற்ப இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. இருக்கைகளின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

10 /10

ஜி.பி.எஸ் சார்ந்த தகவல் அமைப்பு புதிய MEU ரயிலில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உதவியுடன், எந்த சந்திப்பில் ரயில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு வரப்போகிறது போன்ற தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.