ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகளும்... பலனை பெறும் ராசிகளும்... முழு விபரம்!
ஜோதிடத்தில் சூரியன் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது, இது ஒன்பது கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு சந்திரன். கிரகங்களில், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் ராகு-கேதுவை பாவ கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இராசிகளை மாற்றிக் கொண்டு பெயர்ச்சி ஆகின்றன.
ஆகஸ்ட் மாதத்தைப் பற்றி பேசினால், சூரியன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கிறது, புதன் வக்ர நிலையில் இருக்கும். இவை 12 ராசிகளையும் பாதிக்கும். ஆகஸ்டில் கிரகங்கள் எப்போது சஞ்சரிக்கும் மற்றும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒன்பது கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஆகஸ்ட் 17, 2023 அன்று, மதியம் 01:23 மணிக்கு, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். மேஷம், சிம்மம் உள்ளிட்ட பல ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.
ஜோதிடத்தில், செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றல் காரணியாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் செவ்வாய் 18ம் தேதி மாலை 03:14 மணிக்கு கன்னி ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் சஞ்சாரத்தால் மேஷம், கன்னி மிதுனம், கடகம், விருச்சிகம் உள்ளிட்ட பல ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள்.
சுக்கிரன் கிரகம் செல்வம், ஆடம்பரம், செழிப்பு மற்றும் பொருள்சார் இன்பங்களின் காரணியாக கருதப்படுகிறது. தற்போது சிம்ம ராசியில் சுக்கிரன் வகர நிலையில் சஞ்சரிக்கும் நிலையி, ஆகஸ்ட் 3ம் தேதி மாலை 07:37க்கு சிம்ம ராசியில் அஸ்தமித்து, அதன் பிறகு ஆகஸ்ட் 19ம் தேதி காலை 05:21 மணிக்கு கன்னி ராசியில் உதயமாகும். கன்னி உள்ளிட்ட துலாம், ரிஷபம் ராசிக்காரர்கள் இதனால் சுப பலன்களைப் பெறுவார்கள்.
புத்தியின் காரணியான புதன், ஆகஸ்ட் 24, 2023 அன்று மதியம் 12:52 மணிக்கு சிம்ம ராசியில் வக்ர நிலையை அடைகிறார். புதனின் வக்ர பெயர்ச்சி காரணமாக, அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை கலவையாக ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. ZEE News எந்த வகையான அங்கீகாரத்தையும், தகவலையும் உறுதிப்படுத்தவில்லை என்பதை இங்கே குறிப்பிடுவது முக்கியம். எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், தொடர்புடைய ஜோதிட நிபுணரை அணுகவும்.