உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய SBI Debit Card
SBI RuPay JCB பிளாட்டினம் காண்டாக்ட்லெஸ் கார்ட் வைத்திருப்பவர்கள் இனி தங்கள் கார்டுகளை உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இடங்களில் பயன்படுத்தலாம்.
இந்த கார்டின் மூலம் வாடிக்கையாளர்கள் JCB நெட்வொர்க்கின் கீழ் உலகெங்கிலும் உள்ள ATM-கள் மற்றும் PoS-களில் பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் கார்டைப் பயன்படுத்தி JCB-யுடன் கூட்டாண்மையில் உள்ள சர்வதேச இ-காமர்ஸ் வணிகர்களிடமிருந்தும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.
எங்கள் நெட்வொர்க் மூலம், RuPay சர்வதேச சந்தையில் கால் பதிக்கிறது என்பது ஒரு நல்ல விஷயமாகும். NPCI-ல் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஷாப்பிங் அனுபவத்தை வழங்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம் என்று NPCI-ன் COO பிரவீனா ராய் கூறினார்.
JCB ஒரு பெரிய உலகளாவிய கட்டண பிராண்டாகும். இது ஜப்பானில் ஒரு முன்னணி கிரெடிட் கார்டு வழங்குனராகவும் உள்ளது.
உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பரிவர்த்தனை செய்வதற்கு அதிகமான இந்திய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதால், இந்த கார்டு பயன் உள்ளதாக இருக்கும்.