டும் டும் டும்... ஷர்துல் தாக்கூர் திருமண புகைப்படங்கள் - குவியும் வாழ்த்துகள்!

தனது திருமண புகைப்படங்களை ஷர்துல் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

  • Feb 28, 2023, 01:02 AM IST

 

 

 

 

1 /8

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், தனது நீண்ட நாள் காதலியான மித்தாலி பருல்கரை இன்று கரம்பிடித்தார். 

2 /8

ஷர்துல் தாக்கூர் - மித்தாலி பருல்கர் திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது. 

3 /8

ஷர்தல் தாக்கூர் திருமணத்திற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

4 /8

தனது திருமண புகைப்படங்களை, ஷர்துல் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராமில் பகிரிந்துள்ளார்.

5 /8

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,"உன் ஒளியைப் பாராட்ட கற்றுக்கொண்டேன், உன் நிழலை நான் சந்தித்த போது! நல்ல நேரத்திலும், கெட்ட நேரத்திலும், மகிழ்ச்சியிலும் சோகத்திலும், இன்றிலிருந்து இறுதிவரை உங்கள் நண்பராக உடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.   

6 /8

ஷர்துல் தாக்கூருக்கு கடந்தாண்டு, மித்தில உடன் நிச்சயதார்த்தம் ஆனது. சமீபத்தில், கே.எல்.ராகுல், அக்சர் படேலை அடுத்து, ஷர்துல் தாக்கூரும் இந்திய அணியின் புதுமாப்பிள்ளையாகி உள்ளார்.   

7 /8

இவர், தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. எனினும், ஒருநாள் தொடரில் இவர் விளையாடுவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின் ஷர்துல் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்.   

8 /8

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய ஷர்துல், இந்தாண்டு கொல்கத்தா அணிக்கு விளையாட உள்ளார்.