எச்சரிக்கை! தர்பூசணியுடன் கூட்டணி சேராத ‘சில’ உணவுகள்!
தர்பூசணி ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பவர்புட் மிகையாகாது. அதுவும் கோடைக்காலத்தில் இதை விட சிறந்த பழம் எதுவும் இருக்க முடியாது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழம் கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்கவும் உதவுகிறது. குறிப்பாக விட்டமின் சி, ஏ , பி6 நிறைந்த இது உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.
எனினும், தர்பூசணி சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ளாவிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது என்பதோடு, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாயு மற்றும் அமிலத்தன்மை முதல் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட பால் சாப்பிடக்கூடாது. தர்பூசணியில் வைட்டமின் சி இருப்பதால், அது பால் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலில் வீக்கம் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் செரிமானம் மற்றும் அஜீரண பிரச்சனை ஏற்படும்.
தர்பூசணி சாப்பிடும் போது அதிக புரத உணவுகளை தவிர்க்கவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன், தர்பூசணியில் சிறிய அளவு மாவுச்சத்தும். எனவே, புரதம் நிறைந்த பொருட்கள் செரிமான அமைப்பை பாதிக்கும்.
முட்டை மற்றும் தர்பூசணி இரண்டும் வெவ்வேறு விளைவுகளைக் கொண்டுள்ளன. முட்டையில் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் உள்ளன, தர்பூசணியில் நிறைய தண்ணீர் உள்ளது. இந்த இரண்டு கலவைகளும் சேர்ந்து வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
தர்பூசணியை சாப்பிட்ட அதன் பிறகு அல்லது அதனுடன் சேர்த்து உப்பு சேர்த்து சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இப்படி செய்வதால், தர்பூசணியின் சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படாமல் இருப்பதோடு, இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.