Success Tips : வாழ்வில் எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி காண்பது எப்படி? எளிமையான டிப்ஸ் இதோ..
வாழ்வில், வெற்றி-தோல்வி என்பது பல சமயங்களில் அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் நிகழும். ஒருவர், அவர் நினைத்த விஷயத்தில் வெற்றிபெற வில்லை என்றால், பல சமயங்களில் தோல்வியால் துவண்டு விடுவர். ஆனால், அப்படி வரும் தோல்விகள் வெற்றிக்கான முதல் படியே தவிர தோல்வி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவெடுக்கும் திறன்:
வாழ்வில் வெற்றி பெற, கண்டிப்பாக அனைவருக்குள்ளும் முடிவெடுத்தல் திறன் இருப்பது மிகவும் அவசியமாகும். இந்த திறன், கடினமான சமயங்களில் உதவி புரிவது மட்டுமன்றி வாழ்வில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் வழிவகுக்கும்.
தோல்வியை கையாளுதல்:
நாம், எப்படி ஒரு வெற்றியை கையாள்கிறோமோ, அதே போலத்தான் வெற்றியையும் கையாள வேண்டும். ஆம், தோல்வி ஏற்படும் சமயங்களில் மன வேதனையாகதான் இருக்கும். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்தால் மட்டுமே நாம் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
வளர்ச்சிக்கான மனநிலை:
“எனக்கு இதுதான் தெரியும்..எனக்கு இவ்வளவுதான் வரும்..” என்ற மனநிலை, ஒருவரை வாழ்வின் எந்த கட்டத்திலும் வளரவே விடாது. வயதுக்கும். நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். யார், எந்த சமயத்தில் எதை கற்றுக்கொடுத்தாலும், எந்த சமயத்தில் யாரின் யோசனை தேவைப்பட்டாலும் ஈகோ இன்றி, அதை கற்றுக்கொள்ள வேண்டும்.
கடின உழைப்பு:
கடின உழைப்பு என்பது உயிரைக்கொடுத்து ஒரு விஷயத்திற்காக பாடாய் படுவது அல்ல. எந்த விஷயத்தில் வெற்றி வேண்டுமோ, அந்த விஷயத்தில், வெற்றிக்கான வழிகளை செவ்வனே செய்வதுதான் கடின உழைப்பாகும். அதற்கான பலன் இறுதியில் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.
தேவைகள்:
ஒரு மனிதன், தனக்கு எது தேவை எது தேவையில்லை என்ற புரிதலுடன் வாழ்ந்தாலே போதும், அவன் வெற்றிக்கான படியில் ஏற்கனவே ஏற ஆரம்பித்துவிட்டான் என்று அர்த்தம். எனவே, உங்கள் வாழ்க்கையில் என்னென்ன நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடங்கள்-எதை எடுத்துக்கொள்ள கூடாது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
"Winning is not about winning, it's how you play the game" என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உள்ளது. இதற்கு அர்த்தம், நாம் எப்படி ஜெயிக்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்த ஜெயிக்கும் பாதையை எவ்வளவு சாமர்த்தியமாக கடக்கிறோம் என்பதுதான். எனவே, நீங்கள் வெற்றி அடையும் வரை புத்திசாலித்தனமான வகைகளில் முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் வெற்றி உங்களுடையதே என்பதை மறவாதீர்கள்.