விஜய் கட்சி கொடி அறிமுகம் : இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர்..!

Thu, 22 Aug 2024-10:40 am,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. அக்கட்சியின் தலைமையகமான பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார்

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்துக் கொடண்டார். மகனின் கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்தனர். 

இந்நிலையில் தவெக கட்சியின் நான்கு உறுதி மொழிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் உறுதி மொழி நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகம் எப்போதும் போற்றப்படும்.

 

இரண்டாவது உறுதிமொழி, அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவோம்.

மூன்றாவது உறுதிமொழி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் வகையில் செயல்படுவோம். மக்களாட்சி, மதச்சார்பின்மை சமூகநீதி வழியில் நல்ல சேவகராக கடமை ஆற்றுவேன்.

 

நான்காவது உறுதிமொழி, சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என நடிகர் விஜய் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சி அலுவலகத்தில் இருந்த கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலையும் வெளியிட்டார். 

 

கட்சிக் கொடியில் மையத்தில் மஞ்சளும், மேலும் கீழும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. அத்துடன் கொடியின் மையத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலரும் இருக்கிறது. இந்த மலர் வெற்றிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தமிழகம் முழுவதும் அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்ட நடிகர் விஜய், விரைவில் கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் மாநாட்டில் கொடிக்கான காரணம், கொள்கை எல்லாம் அறிவிக்கப்படும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link