உங்க கிட்ட கிரெடிட் கார்ட் இருக்கா... கூடுகிறது வரி... FEMA விதிகளில் மாற்றம்!

Thu, 18 May 2023-10:56 pm,

ரிசர்வ் வங்கியின் LRS (தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம்) ஒரே மாதிரியான வரம்பிற்குள் கிரெடிட் கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் ஏற்படும் செலவுகளை கொண்டு வர FEMA சட்டத்தை மாற்றுவதன் வரி விதிப்பின் கொண்டு வரப்பட உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும். மருத்துவச் சிகிச்சையைத் தவிர இதர அனைத்து விதமான கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு இனி இந்த புதிய நடைமுறைப்படி வரி வசூலிக்கப்படும். 

 

 

அந்நியச் செலாவணி மேலாண்மை (FEMA ) திருத்த விதிகள், 2023  (திருத்தம்) விதிகள் 2023 மூலம், கிரெடிட் கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகளும் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்கள் மற்றும் எல்ஆர்எஸ் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் மீதான TCS விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. புதிய வரி விகிதம் ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 

புதிய விதியின் படி, ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்படும். முன்னதாக, வெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கான சர்வதேச கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள் LRS இன் வரம்பிற்குள் வரவில்லை.

டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பர்வர்த்தனைகள் ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் LRS திட்டத்தின் கீழ் உள்ளன, ஆனால் கடன் அட்டைகள் மூலம் வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகள் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link