February 2021 Release: விஷாலின் சக்ரா உட்பட 5 தமிழ் படங்கள்
'சக்ரா': நடிகர் விஷால் நடிக்கும் 'சக்ரா' திரைப்படத்தில் அவர் மூன்றாவது முறையாக ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். எம்.எஸ்.நந்தன் இயக்கும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் சக்ரா திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
வேட்டைநாய்: நடிகர் ஆர்.கே சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வேட்டைநாய் பிப்ரவரி மாதம் வெளியாகிறது. இயக்குனர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ என்ற படத்தில் அறிமுகமான ஆர்.கே சுரேஷ் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடத்தில் நடித்துள்ளார். வேட்டை நாய் திரைப்படத்தில் நடிகர் ராம்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்பட ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Photos Courtesy: Twitter handles)
'சர்வர் சுந்தரம்': நடிகர் சந்தனம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' தமிழில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. சர்வர் சுந்தரம், நாகேஷ் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டது என்பதால் சந்தானத்தின் இந்த நவீன திரைப்படத்திற்கும், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் மிகவும் தாமதமாகிவிட்டது.
முழுக்க முழுக்க உணவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்று கூறப்படுகிறது. ஆனந்த் பால்கி இயக்கும் இந்த திரைப்படத்தில், வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
(Photos Courtesy: Twitter handles)
களத்தில் சந்திப்போம்: இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம் களத்தில் சந்திப்போம். ஆர். பி. சௌத்ரியின் சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் களத்தில் சந்திப்போம் படத்துக்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா... களத்தில் சந்திக்க ரசிகர்களும் தயார் தான்…
இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதரவி, ரோபோ சங்கர், பாலா சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 5ஆம் தேதியன்று திரைக்களத்தில் இறங்கவுள்ளது களத்தில் சந்திப்போம்.
(Photos Courtesy: Twitter handles)
'ட்ரிப்': டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் 'ட்ரிப்' ஒரு சாகச நகைச்சுவை திரில்லர் திரைப்படம். இந்த படம் அடர்ந்த, இருண்ட காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் குழு மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் பயணம் பற்றியது. நடிகை சுனைனா டிரிப்பில் அதிரடி காட்சிகளில் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்துக் குமார் இசையமைத்துள்ளார்.
(Photos Courtesy: Twitter handles)