AI வந்தாலும் இந்த வேலையில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது!
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தற்போது அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகிறது. குறிப்பாக IT நிறுவன பணியாளர்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர். AI வளர்ச்சி அடைந்தாலும் பாதிக்கப்படாத துறைகளை பற்றி பார்ப்போம்.
மருத்துவர்கள்
AI ஆனது எவ்வளவு அசுர வளர்ச்சி அடைந்தாலும் மருத்துவரை துறையில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தற்போது அறுவை சிகிச்சைகளை ரோபோக்காளே செய்தாலும், அதனை இயக்க மனிதர்கள் தேவை. இதனால் மருத்துவ துறையில் AI எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் பாதிப்பு இல்லை.
நிதி ஆலோசகர்கள்
பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த அந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப முதலீடு திட்டங்களை வழங்க வேண்டும். இது AI தொழில்நுட்பத்தில் சாத்தியம் இல்லை. எனவே நிதி ஆலோசகர்களுக்கு என்றுமே மவுசு குறையாது.
மியூசிக்
AI மூலம் புதிய டியூன்களை கொண்டு வந்தாலும், மனிதர்களின் மனங்களை புரிந்து கொண்டு பாட்டு தயார் செய்ய முடியாத. பாடல் வரிகள், குரல் வளங்களை AI தொழில்நுட்பத்தால் கொண்டு வர முடியாது.
தொழிலதிபர்கள்
எவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும், எப்போது வேண்டுமானாலும் நம்மை வேலையை விட்டு தூக்கலாம். எனவே இனி சொந்த தொழில் செய்வது தான் நல்லது. சிறியது முதல அதிக லாபம் உள்ளது வரை எதுவாக இருந்தாலும் சொந்தமாக செய்வது நல்லது.
வழக்கறிஞர்கள்
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் எந்த ஒரு காலத்திலும் பாதிக்கப்படாது. காரணம் AI தொழில்நுட்பத்தால் குறிப்பிட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீதி வழங்க முடியாது. ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப தீர்வு வழங்க மனிதர்களால் மட்டுமே முடியும்.
அதிகாரிகள்
சமூகப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாத ஒன்று. சிக்கலான சமூக பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வேலையை செய்ய வேண்டும். இதனை மனிதர்களால் மட்டுமே செய்து முடிக்க முடியும்.