குழந்தைகள் முன் பெற்றோர் செய்யவே கூடாத விஷயங்கள்
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன், சிந்தனையுடன் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களுடைய சில கெட்ட பழக்கவழக்கங்கள் குழந்தைகளுக்கு முன்னால் செய்தால், அவற்றை தவறான திசையில் கொண்டு செல்லலாம்.
இதனால், பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கோபத்தை உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினால் அல்லது கத்தினால் நாளடைவில் உங்களின் கோபத்தை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.
நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்களோ அப்படியே கோபமாக உங்களுக்கு பதிலையும் கொடுக்க தொடங்குவார்கள். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை சரியாகக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதற்கு பெற்றோர்கள் பொறுமை மற்றும் அமைதியைக் காட்டுவது முக்கியம்.
சிறிய குழந்தைகள் புதிய விஷயங்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான வார்த்தைகளை பேசக்கூடாது. அந்த வார்த்தைகளை அவர்களும் பேச கற்றுக் கொள்வார்கள்.
பெற்றோர் குழந்தைகள் முன் சண்டையே போடக்கூடாது. அது அவர்களை மனதளவில் பெரியதாக பாதிக்கும். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் குழந்தைகள் முன் அதனை பேசாமல் இருப்பது நல்லது.
பெற்றோராகிய நீங்களே ஒழுக்கமின்மையை கடைபிடித்தால் குழந்தைகளும் அதனை கடைபிடிக்க தொடங்குவார்கள். நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் குழந்தைகளும் ஒழுக்கமாக இருப்பார்கள்.
காலையில் எழுவது முதல் ஓர் இடத்துக்கு கிளம்புவது வரை நீங்கள் சரியாக எல்லா விஷயங்களையும் செய்தால் குழந்தைகளும் அதனை பின்பற்ற கற்றுக் கொள்வார்கள்.
நீங்கள் குழந்தைகள் முன் பொய் சொன்னால், அவர்களும் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். அதனால், எப்போதும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.