கிரகணத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? ஜோதிடமும் அறிவியலும்
Lunar Eclipse vs Earthquake: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்திற்குப் பிறகு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்திற்கும் கிரகணத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
புதுடெல்லி: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்திற்குப் பிறகு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்திற்கும் கிரகணத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் இருந்தது, இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இருந்தது. புதன்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டது. அதிகாலை 1.58 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியா முழுவதும் தெரிந்தது.
டெல்லி-என்சிஆர் மற்றும் லக்னோவிலும் பூமி அதிர்ந்தது. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் கட்டில்களும் மின்விசிறிகளும் குலுங்கத் தொடங்கியதும், மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
பூகம்பங்கள், சூறாவளி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளுக்கும் கிரகணங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சந்திர கிரகணம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுடன் நேரடியாக தொடர்புடையது. ஜோதிடத்தில் கிரகணம் அசுபமானது மற்றும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க | நேபாளம் மணிப்பூர் டெல்லியை தாக்கிய நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம்
2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு முன்பு டெல்லி-என்சிஆர், பாகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ஆக இருந்தது.
இன்றும் அதேதான் நடந்தது. சந்திரகிரகணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே பூமி அதிரத் தொடங்கியது. பண்டைய கணிதவியலாளர் வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவின் படி, பூகம்பங்கள் ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன, அதற்கான அறிகுறிகளில் ஒன்று கிரகணம் ஏற்படுவது ஆகும்.
கிரகணம் எப்போது ஏற்படும்?
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திரகிரகணமும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியகிரகணமும் ஏற்படும். கிரகணம் ஏற்படும்போதோ அல்லது அதற்கு 40 நாட்களுக்கு முன்னரோ பின்னரோ, நிலநடுக்கம் ஏற்படும். அதாவது கிரகணத்தின் முன்னும் பின்னுமாக 80 நாட்களுக்கு நடுவில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்படலாம்.
மேலும் படிக்க | கிரகணத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? ஜோதிடமும் அறிவியலும்
பொதுவாக கிரகணத்திற்கு 15 நாட்களுக்கு முன் அல்லது 15 நாட்களுக்கு பிறகு பூகம்பம் ஏற்படுகிறது. டெக்னாடிக் தட்டுகள் மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதாகவும், பின்னர் அதிலிருந்து சுனாமி பிறப்பதாகவும் அறிவியல் கூறுகிறது. ஜோதிடத்தின் படி, கோள்களின் தாக்கத்தால் டெக்டோனிக் தட்டுகள் நகர்ந்து, ஒன்றுடன் மற்றொன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கத்தின் அளவு, கிரகங்களின் தாக்கத்தைப் பொறுத்தது.
மத நம்பிக்கைகளின்படி, சந்திர கிரகணம் நீரையும் கடலையும் பாதிக்கிறது. கிரகணங்கள் வரவிருக்கும் இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்குகின்றன.
பெரும்பாலான மக்கள், இதை நம்பினாலும், சிலர் நம்புவதில்லை. ஜோதிடத்தின்படி, கிரகணத்தின் தெளிவான விளைவு தெரியும் மற்றும் பூமிக்கு அடியில் நிலைமைகள் எதிர்மாறாக இருக்கும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பூமியின் சிறப்பு தட்டுகளுக்கு அருகில் மட்டுமே நிலநடுக்கம் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது
ஒரு கிரகணத்தில், கோள்கள் ஒன்றுக்கொன்று நிழலாடுகின்றன. இந்த நிழல் நிலவில் விழுந்தாலும் சரி, பூமியில் விழுந்தாலும் சரி, இரண்டிலும் அதன் தாக்கம் உண்டு. இது தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் சூரியனின் கதிர்கள் பூமியின் மீது படவில்லை என்றால், சந்திரன் மற்றும் பூமி இரண்டும் பாதிக்கப்படுகின்றன.
கிரகணத்துக்குப் பிறகு காற்றின் வேகம் மாறி, பூமியில் இடி, புயல் போன்றவற்றின் தாக்கம் அதிகரிக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, கிரகணத்தின் போது சூரியன் முன்னோக்கி செல்லும் திசையில் பூமியும் சந்திரனும் நேர்கோட்டில் வரும்போது புவியியல் இயக்கங்களின் சாத்தியம் அதிகரிக்கிறது.
ஜோதிடத்தில் கிரகணம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதன் தாக்கம் மக்களின் வாழ்வில் காணப்படுகிறது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது, புவியீர்ப்பு விசையானது மிகப்பெரிய விளைவைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பௌர்ணமி நாளில் கடலில் அதிக அலைகள் வந்து கிரகணத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கிறது. புவியீர்ப்பு விசையின் அதிகரிப்பு மற்றும் குறைவு காரணமாக பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ