பல நூற்றாண்டுகளாக, மனிதகுலம் நம்மைச் சுற்றி நடைபெறும் இயற்கை நிகழ்வுகளுக்கு விளக்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. அதில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானம் ஒன்றை முன்வைக்கும் முன், அதன் மீதான மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள் அனைத்தும் நமது பண்டைய நாகரிகங்கள் கற்பித்துள்ளன. இந்த கதைகளில் சில நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய 'பிளட் மூன்' சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதை தவறிவிட்டால், அடுத்த சந்திர கிரகணம் அடுத்தாண்டு அக். 28ஆம் தேதிதான் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தின்போது, செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என பல கூற்றுகள் உள்ளன.
இருப்பினும், அவற்றின் பயனுள்ளவற்றை தாண்டி பயனில்லாத கட்டுக்கதைகளை அகற்றுவதற்கான நேரம் இதுதான். ராகு (தெற்கு சந்திர முனை) என்பது, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை ஏற்படுத்த, சூரியன் மற்றும் சந்திரனை விழுங்கும் ஒரு அரக்க வடிவிலான கடவுள் என்று இந்து புராணங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | Lunar Eclipse 2022: ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: 12 ராசிகளுக்கும் பலன்கள்
நவீன சமுதாயத்தில் பார்த்தோம் ஆனால், இங்கு இருக்கும் தவறான அனைத்தையும் ராகு பிரதிநிதித்துவப்படுத்துவதால், மக்கள் உடலுறவு கொள்ள வேண்டாம் அல்லது விலங்குகள் மீது உட்காருவதைத் தவிர்க்கவும் அல்லது கிரகணத்திற்கு பிறகு குளிப்பதைத் தவிர்க்கவும் போன்ற ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. அந்த நேரத்தில் பல்வேறு எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்றும் நம்புகின்றனர்.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல இந்திய ஜோதிடர் ஒருவர், கிரகணத்தின்போது உடலுறவு மேற்கொள்வதை தவிர்க்கும்படி கூறியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. "இந்து சாஸ்திரங்களின்படி, மிகவும் அசுபமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணங்கள் அனைத்தும் கெட்ட சகுனங்களாக மக்கள் நம்புகின்றனர்" என்றும் அந்த ஜோதிடர் கூறியிருந்தார். ஆனால், இந்த கூற்றை அறிவியல் ரீதியாக பலரும் மறுத்தனர். படுக்கையில் இணையருடன் சரியாக உடலுறவு கொள்ள இயலாததற்கும், சந்திரனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவியல் கூறுகிறது.
ராகுவின் "பாவங்களைக் கழுவ" அல்லது ராகுவின் தீமைகளை போக்க, மக்கள் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக கிரகணம் ஏற்பட்ட உடனே, ஆடையுடன் குளிர்ந்த நீரில் குளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கும் அறிவியல் பூர்வமாக எந்த பதிலும் இல்லை.
கிரகணத்தின் போது சாப்பிடவேக் கூடாது. சந்திர கிரகணத்தின் போது அதிகப்படியான புற ஊதா (UV) மற்றும் காஸ்மிக் கதிர்களுக்கு வெளிப்படுவதால், எதிர்மறை ஆற்றல் உங்கள் மீது அதே விளைவைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கும் அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை.
சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய வேறு சில கட்டுக்கதைகள் இங்கே உள்ளன: விலங்குகள் மீது உட்கார வேண்டாம்; பொழுதுபோக்கை தவிர்க்கவும்; தெய்வங்களின் சிலைகள் அல்லது உருவங்களைத் தொடுவதைத் தவிர்ப்பது. இவற்றை ஒருநாள் செய்து பார்த்தாலும் தவறில்லைதான்.
மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்; பண இழப்பை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ