Lunar Eclipse 2022 : இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் முடிந்துவிட்டது. நாடு முழுவதும் இருந்து வெளியான கிரகணத்தின் படங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதன் புகைப்படங்களை இங்கே காணுங்கள்.
தலைநகர் டெல்லியில் மாலை 5:29 மணிக்கு சந்திரன் உதயமான பிறகு, பகுதி சந்திர கிரகணம் ஏற்பட்டது.
நாட்டின் வடகிழக்கு நகரமான கவுகாத்தியில் இருந்து முழு சந்திர கிரகணத்தை காண முடிந்தது. அங்கு சந்திரன், சிவப்பு, கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.
புனித நகரமான பிரயாக்ராஜில் (அலகாபாத்) இன்று மாலை 5:10 மணிக்கு சந்திரகிரகணம் காணப்பட்டது.
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்தில் இன்று மாலை 5:40 மணியளவில் சந்திர கிரகணம் ஏற்பட்டது.
இன்று மாலை 5:01 மணிக்கு சந்திர உதயத்திற்குப் பிறகு பாட்னா மக்கள், முழு கிரகணத்தில் சந்திரனைக் கண்டனர்.
ஜம்மு நகரில் இன்று மாலை 5:45 மணிக்கு சந்திர உதயத்துடன் பகுதி சந்திர கிரகணம் ஏற்பட்டது.
Next Gallery