வைரல் வீடியோ: இணையத்தில் பல விதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இவற்றில் நாம் பல அரிய காட்சிகளையும் காண்கிறோம். சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் வெளியாகின்றன. சில சமயம் சிலர் பாம்புகளுடன் விளையாடுவதைக் காணகிறோம். சில சமயங்களில் பாம்புகள் கடுப்பாகி சரியான பதிலை அளிக்கின்றன. அதன்படி தற்போது இது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டில் உள்ள சமையலறைக்குள் மறைந்திருந்த ஆபத்தான அரச நாகப்பாம்பு தொடர்பான காணொளி. இவ்வாறான நிலையில், சமையலறைக்குள் நுழைந்த குடும்பஸ்தர் ஒருவர் பாம்பைக் கண்டு பயந்து அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து கதவை வெளியில் இருந்து அடைத்தனர். பின்னர் பாம்பை பிடிக்க பாம்பாட்டி அங்கு வரவழைக்கப்பட்டார்.


மேலும் படிக்க | தாய் சிங்கத்தையே மிரள வைத்த குட்டி சிங்கம்! க்யூட்டான வீடியோ வைரல்! 


பாம்பாட்டி வீட்டிற்குள் நுழைந்தவுடன், பாம்பு கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் மறைந்திருப்பதை வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு வீடியோவில் எதைப் பார்த்தாலும் மிரட்டு போய்விடுவீர்கள். உண்மையில், பாம்பாட்டி பாம்பை வெளியே எடுக்க முயன்றார். இதைப் பார்த்த அந்த நபரும் சற்று அசௌகரியம் அடைந்தார். பாம்பு வெளியே வந்தவுடனேயே அவரை கடிக்க முயற்ச்சி செய்வதையும் பார்க்கலாம்.  பாம்பின் இத்தகைய ரியாக்ஷனைப் பார்த்து, பாம்பாட்டி பாம்பு மிகவும் கோபமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார். இருப்பினும், இந்த நேரத்தில், அந்த நபர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நாகப்பாம்பு தொடர்பான சில முக்கிய தகவல்களையும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து அரச நாகப்பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அவர் அடைத்தனர். 


வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இது MIRZA MD ARIF என்ற YouTube சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க |  நீ சொன்னதலாம் கேக்க முடியாது! எட்டி உதை விட்ட நாயின் வீடியோ வைரல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ