கொஞ்ச நேரம் சும்மா இருடா! தாயை பயமுறுத்தும் குட்டி சிங்கம்!

குட்டி சிங்கம் ஒன்று அமைதியாக ஓய்வெடுத்து கொண்டிருக்கும் தாய் சிங்கத்தின் அருகில் சென்று கர்ஜித்து அதனை பயமுறுத்திய வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 4, 2022, 08:30 PM IST
  • அமைதியாக படுத்து இருக்கும் தாய் சிங்கம்.
  • பின்னால் வந்து பயமுறுத்தும் குட்டி சிங்கம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கொஞ்ச நேரம் சும்மா இருடா! தாயை பயமுறுத்தும் குட்டி சிங்கம்! title=

மனிதர்களை போல தான் விலங்குகளும் சில செயல்களை செய்கிறது என்பது நமக்கு தெரிந்தாலும், விலங்குகளிடத்தில் நமக்கு ஒரு பயம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது.  காடுகளில் வாழும் விலங்குகளை நேரில் காணும்பொழுது மனதுக்குள் சிறு பதட்டம் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான், ஆனால் இப்போது காட்டின் ராஜா என்று போற்றப்படும் சிங்கத்தின் ஒரு செயல் நம்மை ஈர்த்துள்ளது.  சிங்கத்தை பார்த்தால் மனிதர்களும், மற்ற விலங்கினங்களும் பயப்படும் ஆனால் இங்கு ஒரு சிங்கத்தையே பயப்பட வைத்துள்ளது அதன் குட்டி.  இந்த காட்சி காண்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த காட்சியில் சிங்கத்தின் தாய் பாசமும் தெரிகிறது.  இதுவே வேறு விலங்குகள் இப்படி சிங்கத்திடம் செய்திருந்தால் அங்கு நடந்திருக்கும் கதையே வேறு, ஆனால் தனது குட்டி என்பதால் அந்த தாய் சிங்கம் அதனை எதுவும் செய்யாமல் விட்டு விடுகிறது.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

 

விலங்குகளை பிடித்தவர்களுக்கு நிச்சயமாக இப்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த சிங்கத்தின் வீடியோவும் கண்டிப்பாக பிடித்திருக்கும்.  இந்த க்யூட்டான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வைரல் வீடியோவில் ஒரு தாய் சிங்கம் அமைதியாக படுத்து ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது.  அப்போது இரண்டு சிங்கக்குட்டிகள் அங்கு தென்படுகிறது, ஒரு சிங்கக்குட்டி தாய் சிங்கத்தின் முன்னாள் மெதுவாக நடந்து வருகிறது, மற்றொரு சிங்கக்குட்டி, தாய் சிங்கத்துக்கு தெரியாமல் அதன் பின்னால் பதுங்கி பதுங்கி நடந்து வருகிறது.  பின்பக்கமாக நடந்து வந்த சிங்கக்குட்டி திடீரென்று தாய் சிங்கத்தை பயமுறுத்தும் எண்ணத்தில் வேகமாக கர்ஜிக்கிறது, இந்த கர்ஜனையை கேட்டதும் அமைதியாக படுத்திருந்த தாய் சிங்கம் பயந்து எழுந்துவிடுவதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.

ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை ஏராளமான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர், இதுவரை இந்த வீடியோவை 2 மில்லியனுக்கும் அதிகமான நெட்டிசன்கள் பார்த்து ரசித்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.  மேலும் இந்த வீடியோவுக்கு பல்லாயிரக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | Video: ஆடையின்றி வந்த பிரபல மாடல்... மிரண்ட பார்வையாளர்கள் - இனி இப்படிதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News