உலக அதிசயங்கள் கட்டடங்களாக தெரிந்தளவுக்கு படைப்புகளாக இருப்பவை பற்றி நாம் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. மனிதால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கட்டங்கள், கலைச்சிற்பங்கள் ஒரு புறம் வியக்க வைப்பவை என்றால், மறுபுறம் படைப்பிலேயே வியக்க வைக்கும் சில உயிரினங்கள் இருக்கின்றன. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என வள்ளுவன் கூறியிருப்பது போல் நமக்கு தெரிந்த ஆயிரம் உயிரினங்கள் இருக்கிறது என்றால், நமக்கு தெரியாமல் பல்லாயிரம் உயிரினங்கள் இந்த உலகின் ஒவ்வொரு மூலை முடுக்களிலெல்லாம் இருக்கின்றன. அவற்றை இந்த ஒரு பிறவியில் அறிந்து கொள்வது சாத்தியமே இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | India Vs Pakistan: டிராவிட் பேச மறுத்த அந்த 4 வார்த்தை; பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிரிப்பலை


இருப்பினும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களால் இயன்ற அளவிலான உயிரினங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கடலுக்கு அடியில் எண்ணற்ற பொக்கிஷங்கள் பொதித்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டு ரசிக்க பிறவிப் பயன் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம். அந்தளவுக்கு ஒருவரை வியக்க வைக்கும், மெய்சிலிர்க்க வைக்கும் உயிரினங்களும் அதிசயங்களும் இருக்கின்றன. நிலத்தின் மேல் பச்சோந்தி கேள்விப்பட்ட நமக்கு கடலுக்கு அடியில் இருக்கும் பச்சோந்தி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 


நிலத்தின் மேல் இருக்கும் பச்சோந்தி, பச்சை நிற இலை தளைகளுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்றால், கடலுக்குள் இருக்கும் மீன் ஒன்றும் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோ கடலுக்கு அடியில் எடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணுக்குள் புதைந்திருக்கும் மீன் ஒன்று, மண் போலவே உடலமைப்பை மாற்றியமைத்து இருக்கிறது. அப்போது அங்கு வரும் மற்றொரு மீனை ஈஸியாக பிடித்து இரையாக்கிக் கொள்கிறது. இந்த அழகான காட்சியை சூப்பராக படமாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | ஒரு தலைமுறையின் ஊக்கம் - கோலிக்கு ஹாங்காங் கொடுத்த பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata