IND vs ENG Victory: அஸ்வினின் மனைவியின் காதல் நிறை டிவிட்டர் Post
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் (IND vs ENG) முடிந்தது. IND vs ENG டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீதி நாராயணன், கணவரை வீட்டுக்கு விரைவில் வரச் சொல்லி அன்பை பகிர்ந்து கொண்டார்.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் (IND vs ENG) முடிந்தது. IND vs ENG டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீதி நாராயணன், கணவரை வீட்டுக்கு விரைவில் வரச் சொல்லி அன்பை பகிர்ந்து கொண்டார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் Bio-secure bubble பாதுகாப்பு வளையத்தில் வருகிறார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அவரது மனைவி ப்ரீத்தி நாராயணன் மற்றும் மகள்களும் அவருடன் இருந்தனர். இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்ற ரவிசந்திரன் அஸ்வின், தனது வீட்டிற்கு திரும்ப ஆர்வமாக உள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தத் தொடரின் 4 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, போனஸாக ஒரு சதத்தையும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு அளித்திருக்கிறார்.
Also Read | IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்
உண்மையிலேயே ஆட்டத்தை மாற்றிய அஸ்வினுக்கு ’தொடரின் ஆட்டநாயகன்' (Man of the Series) விருது வழங்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்புவதில் ஆவலாக இருக்கிறார் அஸ்வின். அஸ்வினின் மனைவி, வெற்றியுடன் திரும்பி வரும் கணவருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
மனைவி ப்ரீதியின் காதல் செய்தி
டீம் இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி பிரிதி நாராயணன், 'இப்போது பாதுகாப்பு வளையத்திஅ உடைத்து வீட்டிற்கு வாருங்கள்' என்று ட்வீட்டரில் தனது ஆவலையும் அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
'Bio-secure bubbleஇல் இருப்பது கடினம்'
நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், Bio-secure bubble வாழ்க்கை மிகவும் சவாலானது என்று குறிப்பிட்டுள்ளார். அஸ்வின் ஆகஸ்ட் முதல் Bio-secure bubble பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியைச் சேர்ந்த பல வீரர்களுடன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020 க்குப் புறப்பட்ட சென்றது முதல் Bio-secure bubble பாதுகாப்பு வளையத்தில் வசித்து வருகிறார்.
இதன் பின்னர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இருந்தது, இப்போது இந்தியாவில் இங்கிலாந்து மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக Bio-secure bubble பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறார் அஸ்வின்.
Also Read | ஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை, அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியவர்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR