Viral Video : “காலுக்கு மசாஜ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!
Viral Video Of Cute Elephant : ஒரு யானை, தனது பாகனிடம் காலை காண்பித்து மசாஜ் செய்ய சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Cute Elephant : உலகில் இருப்பதிலேயே மிகவும் பெரிய மிருகங்களுள் ஒன்று, யானை. உலகிலேயே அதிகமாக, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில்தான் அதிகமாக யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதாம். அதிலும் குறிப்பாக, அப்ரிக்காவில் பாட்ஸ்வானா, ஜிம்பாவே, டான்சானியா, கென்யா உள்ளிட்ட இடங்களிலும் ஆசியாவில் தாய்லாந்து, இலங்கை, இந்தியா உள்ளிட்ட இடங்களிலும் யானைகள் அதிகமாக இருக்கின்றனவாம். இந்தியாவில், தற்போது 27,000 முதல் 30,000 வரை யானைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அசாம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இடங்களில்தான் இவை அதிகமாக வாழ்கின்றனவாம்.
யானையின் குணாதிசயம்..
தமிழ்நாட்டில், பல்வேறு இடங்களில் நாம் யானைகளை பார்க்க முடியும். சென்னை, காேவை போன்ற நகரங்களில் இவற்றை பார்ப்பது அரிது என்றாலும், சில விலங்குகள் நல காப்பகத்திலும், கோயில்களிலும் இவற்றை காணலாம். உருவத்தில் பெரிதாக உள்ளத்தில் குழந்தை பாேன்றவை யானைகள்.
மனிதர்களுடன் பழகாத காட்டு யானைகளை நம்ப முடியாது என்பதை தவிர அவையும் பல சமயங்களில் க்யூட்டான விஷயங்களை செய்யும். பிற விளங்குகளை போல கூட்டமாக பயணிக்காத யானைகள், தங்களின் குடும்பத்துடன் அல்லது தனக்கான ஒரு தனி கூட்டத்துடன் மட்டும்தான் பயணிக்குமாம். மனிதர்களுடன் பழகும் யானைகள், நினைத்தால் ஏதேனும் செய்து நம்மை பயமுறுத்த முடியும். ஆனால், அவை நம் பேச்சுக்கு அடி பணிந்து நம்மை பெரும் மதிப்புடன் நடத்துகின்றன.
மேலும் படிக்க | நாயை வெச்சி செஞ்ச பூனை... அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ
வைரல் வீடியோ..
ஒரு யானை, தனது பாகனிடம் காலை காண்பித்து மசாஜ் செய்ய சொல்லும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.