கொரோனா வைரசின் தாண்டவம் நிற்பதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் தொற்றின் ஆதிக்கம் அதிகரித்துண்டே செல்கிறது. முகக்கவசங்களை அணிந்துகொள்வதும், தனி மனித இடைவெளியை பராமரிப்பதும் நமது வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எழுச்சியைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், தங்களுக்குள் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க மக்கள் நாளுக்கு நாள் புதிய வழிகளைக் கண்டு பிடிக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலிலும் இவற்றில் சில நம் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்துவிடுகின்றன. 


ஆம், எண்ணிப்பார்த்தால், ஓட்டல்களில் சாப்பிடும்போது, போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும்போது என இது போன்ற சாதாரண சூழல்களிலேயே ஆறு அடி இடைவெளியை கடைபிடிப்பது சற்று சிக்கலான விஷயம்தான். 


சில தனி மனித இடைவெளி (Social Distancing) நுட்பங்கள் நல்லதை விட அதிக தீமைகளையே விளைவிக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த செய்தியை தான் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது சமீபத்திய ட்விட்டர் பதிவின் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார். 


ALSO READ: "இட்லி அம்மா"வுக்கு புதிய வீட்டு கட்டிக் கொடுக்க முடிவு - வாக்குறுதியை நிறைவேற்றும் ஆனந்த் மஹிந்திரா


மஹிந்திரா குழுமத் தலைவர் பகிர்ந்த படத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு வாகனத்தை ஓட்டுவதைக் காண முடிகிறது. ஆனால், இந்த இடைவெளியை கடைபிடிக்க இவர்கள் தங்கள் கழுத்துகளில் ஏணியை பொருத்திக்கொண்டு இருப்பதுதான் ஆச்சரியத்தையும் சிறிய அச்சத்தையும் அளிக்கின்றது. இந்த படம் இப்போது எடுக்கப்பட்டு வைரல் ஆகும் புதிய படம் அல்ல என்றாலும், இதன் மூலம் ஆனந்த் மஹிந்திரா கூற விரும்பும் செய்தி, இந்த காலத்திற்கு ஏற்ற செய்தியாகவே உள்ளது. 


“இந்த கடினமான நேரத்தில் இந்த படம் என் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது. சில சமூக இடைவெளி நுட்பங்களில் பாதுகாப்பை விட அபாயம்தான் அதிகமாக உள்ளது" என்று ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) தனது பதவில் எழுதியுள்ளார். 


அவரது பதிவை இங்கே காணலாம்:



இப்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த பதிவு, பல லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகிறது. தனி மனித இடைவெளியின் முக்கியத்துவத்தையும் அதில் இருக்கும் அபாயத்தைப் பற்றியும் விழிப்புணர்ச்சியை எற்படுத்தியதற்காக சமூக ஊடக பயனர்கள் ஆனந்த் மஹிந்திராவை பாராட்டி வருகின்றனர். 


நெட்டிசன்கள் ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்: 





ALSO READ: ஆட்டோ மீது வீடு கட்டி அசத்திய இளைஞனை வலைவீசி தேடி வரும் ஆனந்த் மஹிந்திரா!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR