COVID Cases Spike: இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் கோவிட் பாதிப்பு

இந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 4,01,993 பேருக்கு COVID-19 தொற்று பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,523 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 1, 2021, 11:30 AM IST
  • இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் கோவிட் பாதிப்பு
  • 24 மணி நேரத்தில் 3,523 இறப்புகள்
  • நாட்டில் 32 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
COVID Cases Spike: இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் கோவிட் பாதிப்பு title=

இந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 4,01,993 பேருக்கு COVID-19 தொற்று பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,523 இறப்புகள் பதிவாகியுள்ளன.

புதுடெல்லி: இந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 4,01,993 பேருக்கு COVID-19 தொற்று பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,523 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், இந்தியா ஒரு மோசமான மைல்கல்லை எட்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 4,01,993 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் இன்று (மே, 01, 2021, சனிக்கிழமை) காலை தெரிவித்தன. இதன் அடிப்படையில் நாட்டில் 32 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.  

இந்த நிலையில், COVID-19 தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக சில மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி இயக்கம் மூன்றாவது கட்டத்தை நோக்கி நகரும். தடுப்பூசிகளின் வரத்துக்கு பிறகுதான் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.

Also Read | குஜராத் மருத்துவமனை கோர தீ விபத்தில் குறைந்தது 18 கோவிட் நோயாளிகள் பலி

ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பிறகுதான் பிறருக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்த்துப் போராடுகிறது. மக்கள் விழி பிதுங்கி என்ன செய்வதென்று புரியாமல் திகைக்கும் அளவுக்கு தினசரி பாதிப்புகளும் இறப்புகள் அதிகபட்ச அளவில் பதிவாகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவிட்டுக்கு 3,523 இறப்புகள் பதிவாகியுள்ளன, இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை COVID-19 இலிருந்து 2,11,853 ஆக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) படி, 28,83,37,385 கோவிட் மாதிரிகள் 2021 ஏப்ரல் 30 வரை COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்டன. இவற்றில், 19,45,299 மாதிரிகள் நேற்று சோதனை செய்யப்பட்டன.

Also Read | எனது பெற்றோருக்கு கொரோனா, உதவி கேட்கும் பிரபல நடிகை!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News