Assam Rhino Viral Video : அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட  தேசிய பூங்காவில் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. தற்போது, அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியிலிருக்கும் அவை அடிக்கடி விபத்தில் சிக்குவது, சுற்றுலா பயணிகளின் வீடியோக்கள் ஆகியவற்றின் மூலம் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அஸ்ஸாமின் இரு வேறு இடங்களில் காண்டாமிருகங்கள் சுற்றுலா பயணிகளை துரத்தும் வீடியோக்கள்  அடுத்தடுத்து வெளியாக வைரலாகி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், அஸ்ஸாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்காவில், ஒற்றை கொம்பு காண்டாமிருகம் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்துகின்ற வீடியோ இணையத்தில் அதிகம் பரவியது. இது  கடந்த வியாழக்கிழமை (டிச. 29) நடந்ததாகவும், இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 



மேலும் படிக்க | அம்மா என்றழைக்காத உயிரில்லையே... இணையவாசிகளின் மனதை உருக வைத்த வீடியோ!


காட்டுப்பகுயின் ஒற்றையடி பாதையில் சஃபாரி வாகனம் சென்றுகொண்டிருக்க, திடீரென புதருக்குள் இருந்து காண்டாமிருகம் வெளிவந்தது. அது அந்த வாகனத்தை நீண்ட தூரத்திற்கு துரத்தி வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஓய்வதற்குள், நேற்று ஒரு சம்பவம் இதேபோன்று அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் நடந்துள்ளது. 


காசிரங்கா தேசிய பூங்காவில் சென்றுகொண்டிருந்த மூன்று சஃபாரி ஜீப்களை ஒரு காண்டாமிருகம் தாக்க முற்பட்டு ஓடிவந்தது. மேலும், அந்த காண்டாமிருகம் ஒரு வாகனத்தை பின்பக்க டயரை உரசியது. இது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. 



பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படாத நிலையில், வாகனத்தின் டயரில் காண்டாமிருகத்தின் பல் தடம் பதிந்துள்ளது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அந்த காண்டாமிருகத்திற்கு வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அந்த வாகனத்தை துரத்திய சுற்றுவட்டராப் பகுதிகளுக்கு அருகே உள்ள புல்வெளி பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இரண்டு வைரல் வீடியோக்கள் தற்போது பரபரப்பான விவாதங்களையும் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ