இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பல விஷயங்கள் ரசனையை தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், கூடைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் ஏராளமான குழந்தைகள் தவழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தை: திகிலூட்டும் சிசிடிவி காட்


கூடைப்பந்து மைதானத்தில் நடைப்பெற்ற இந்த பந்தயத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரு பக்கத்திலிருந்து தவழ்ந்து மறுபக்கத்தில் இருக்கும் தங்களது பெற்றோரை அடைய வேண்டும். அதன்படி இந்த பந்தயம் தொடங்கியவுடன் குழந்தைகள் மறுபக்கத்தில் இருக்கும் தங்களது பெற்றோரை நோக்கி தவழ ஆரம்பித்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு குழந்தை மட்டும் அழுவதுமாக இருந்து. சற்று நேரத்தில் வெற்றிக்கோட்டை நெருங்கும் நேரத்தில் மற்றொன்று குழந்தை அந்த அழுத குழந்தையிடம் சென்று விளையாடத் தொடங்குகினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 



 


இந்த நிலையில் இந்த வீடியோவை தன்சு யேகன் என்பவர் உலகின் அழகான விளையாட்டு - குழந்தைகளுக்கான தவழும் பந்தயம் தான் என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது வரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 600க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலர் பாராட்டியும், விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR