யானைகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக தோன்றினாலும், அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு குழந்தைகள் செய்யும் குறும்புகளை போல அழகாக தெரிகிறது.  பொதுவாக யானையை பார்த்து நாம்தான் பயந்திருப்போம், ஆனால் யானை பயந்திருப்பதை பார்த்திருப்போமா? தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் யானைக்குட்டி பேய் வந்துவிட்டது என நினைத்து பயந்து ஓடுகிறது.  பேய் உண்மையில் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பலருக்கும் பேய் என்று கேட்டாலே அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பேய் என்று கேட்டால் பயந்து நடுங்கிவிடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி, 4 பெண் ரவுடிகளின் வீடியோ வைரல் 


மனிதர்கள் மட்டும் பேய் என்றால் பயப்படமாட்டார்கள், உருவத்தில் பெரியதாக இருக்கும் விலங்குகளும் கூட பயப்படும் என்பதை இந்த வீடியோவின் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.  சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் கம்புகளை கொண்டு அடைக்கப்பட்ட வேலிக்குள் தாய் யானையும், குட்டி யானையும் உள்ளது.  அந்த இரவு நேரத்தில் குட்டி யானை ஒரு மஞ்சள் நிற பெட்ஷீட்டில் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டு இருக்கின்றது, வேலி ஓரமாக தாய் யானை நின்றுகொண்டு இருக்கிறது.  அப்போது அந்த பகுதியில் வேகமாக காற்று வீச, அந்த மஞ்சள் நிற பெட்ஷீட் பறந்து போயி உறங்கிக்கொண்டு இருக்கும் குட்டி யானை மீது விழுகிறது.