வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் நடன வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


நமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த நடனம் ஒரு அழகான வழி என்பது அனைவருக்கும் தெரியும். நடனமாடுவதே ஒரு ஆனந்தமான விஷயம்தான். 


சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களின் இந்த சகாப்தத்தில், இளைஞர்கள் அவ்வப்போது பல நடன வீடியோக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். வைரலாகும் நடன டிரெண்டுகளுக்கு ஏற்றவாறு பலர் பல நடன ரீல்களையும் வெளியிடுகிறார்கள். 


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


பல நடன வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில் இருவர் டிரெண்ட் ஆகும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை காண முடிகின்றது. இளம் நடனக் கலைஞர்களான இருவரும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்துகொண்டு, ஒருங்கிணைந்த நடன அசைவுகள் மற்றும் சூப்பர் எனர்ஜியுடன் பாடலுக்கு நடனமாடுவதை வீடியோ காட்டுகிறது. 


இந்த பாடல் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோரி தேரே ப்யார் மே’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும். இதில் கரீனா கபூர் மற்றும் இம்ரான் கான் நடித்துள்ளனர். 


இந்த வீடியோவை முகுல் கெய்ன் என்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சர் பகிர்ந்துள்ளார். இவருக்கு 3.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொலைக்காட்சி நடன ரியாலிட்டி ஷோக்களான டான்ஸ் இந்தியா டான்ஸ் 7 மற்றும் இண்டியாஸ் பெஸ்ட் டான்சர் ஆகியவற்றிலும் கலந்துகொண்டுள்ளார். 


அசத்தலான அந்த டான்ஸ் வீடியோவை இங்கே காணலாம்:


 



பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 37.4K லைக்குகளையும் ஏகப்பட்ட வியூஸ்களையும் பெற்றுள்ளது. பல இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். கமெண்டு செக்‌ஷனில் பல வித எமோஜிக்களையும் பயனர்கள் உள்ளிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | குழந்தையை தண்ணீரில் விழாமல் பார்த்துக்கொள்ளும் நாயின் வீடியோ வைரல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR