உன்னால நா கெட்டேன்! என்னால நீ கெட்ட! கரடியின் சேட்டை வைரல்!

கரடி கூட்டங்கள் ஒன்றாக இணைந்து ஊஞ்சலில் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 21, 2022, 02:38 PM IST
  • ஊஞ்சலில் விளையாடும் கரடிக்குட்டிகள்.
  • ஒன்றுக்கொன்று செல்லமாக சண்டையிடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
  • இணையத்தில் பலரது மனதையும் வென்றுள்ளது.
உன்னால நா கெட்டேன்! என்னால நீ கெட்ட! கரடியின் சேட்டை வைரல்! title=

கரடிகள் உருவ அளவில் பெரிதாக இருந்தாலும், ஆபத்தை ஏற்படுத்தும் என்று பயந்தாலும் அவை அதன் இனத்தோடு ஒன்றாக இருக்கும்போது அதனுள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம் வெளிப்படுகிறது என்பதை நிரூபிக்கும் விதமான காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  மனிதர்கள் எப்படி கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்று அங்கு ஆனந்தமாக பொழுதை கழிக்கிறார்களோ, அதேபோல கரடிகளும் மகிழ்ச்சியாக விளையாடி அவர்களின் பொழுதை ஜாலியாக கழிக்கின்றன.  இந்த வீடியோவை பார்த்த பலரும் கரடிகளின் மகிழ்ச்சியான விளையாட்டில் மெய்மறந்து ரசிக்கின்றனர்.

bear

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான ட்விட்டரில் சுதா ராமன் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வைரல் வீடியோவில், இரு மரங்களுக்கு இடையில் ஊஞ்சல் ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது, அதில் இரண்டு கரடிகள் ஏற முயற்சி செய்கிறது.  அந்த ஊஞ்சலில் அருகில் ஒரு பெரிய கரடி படுத்துக்கொண்டு இருக்கின்றது.  ஒருவழியாக அந்த இரண்டு கரடிகளும் ஊஞ்சலில் மீது ஏறிவிடுகிறது, ஆனால் அவற்றால் ஊஞ்சல் மீது சரியாக ஏறமுடியாமல் தடுமாறி கீழே விழுந்துவிடுகிறது.  

 

பின்னர் அவர்களின் அருகில் நான்காவதாக ஒரு சிறிய கரடி ஒன்று ஓடிவருகிறது.  அந்த கரடி கூட்டங்கள் இவ்வாறாக அதன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுகிறது.  இந்த அழகான வீடியோவை இதுவரை இணையத்தில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு எண்ணற்ற லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News