வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. 


சமூக ஊடகங்களில் பல திருமண வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றில் மணமக்களுக்கு இடையில் இருக்கும் அன்பு, பாசம், காதல், கோவம் என அனைத்தையும் நாம் காண முடிகின்றது. மணமக்களை தவிர, மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் திருமணங்களின் செய்யும் கிண்டல்களுக்கும் குறும்புகளுக்கும் கூட பஞ்சம் இருப்பதில்லை. 


ஆனால், மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டதை நாம் பார்த்திருக்க மாட்டோம். அப்படி ஒரு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது.


மேலும் படிக்க | முட்டையை அபேஸ் செய்ய வந்த பெண்: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்..வைரல் வீடியோ


தற்போது பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரு வேடிக்கையான இந்தி பாடலில் ரீல்ஸ்களை உருவாக்குவதை காண முடிகின்றது. ஆனால், அவர்கள் செய்த விஷயத்தால் அவர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 


மணமேடையில் மணமக்கள் செய்த வேலை


வீடியோவில் மணமகனும், மணமகளும் மணமேடையில் நாற்காலிகளில் வசதியாக அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது ​​மணமகன் வேடிக்கையான முறையில் ஒரு பாடலுக்கு நடிக்கிறார், அதில் மணமகளும் கலந்து கொள்கிறார்கள். ‘உனக்கும் எனக்கும் பொருத்தமே இல்லை...’ என்பது போல இந்தி பாடல் வரிகளின் பொருள் இருக்கிறது. பின்னர் இருவரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் சலசலப்பை உருவாக்கியுள்ளது, இதை மக்கள் அதிகம் விரும்பி பகிர்ந்து வருகின்றனர். இதை பார்த்தால் கண்டிப்பாக யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.


மணமகன் மற்றும் மணமகளின் வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது


இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் p_for_piyush.g என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் இதற்கு வெவ்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


'முதல் முறையாக ஒரு மணமகன் ஒரு சரியான நேரத்தில் ஒரு சரியான விஷயத்தை கூறியுள்ளார்’ என ஒரு பயனர் கிண்டல் செய்து கமெண்ட் செய்துள்ளார். ‘மாப்பிள்ளைக்கு தைரியம் உள்ளது.. அதை ஒப்புக்கொள்ள வேண்டும்’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். ‘வீட்டிற்கு போய் பார்த்தால் தான் அவர் நிலை என்ன ஆனது என தெரியும்’ என மற்றொருவர் மீண்டும் கிண்டல் செய்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ’யப்பா என்ன சுகம்’ சாலையில் மல்லாக்க படுத்த நாய் - என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ