வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
இணையத்தில் விலங்குகள் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றன. இவற்றின் வீடியோகளை இணையவாசிகள் அதிக ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். விலங்குகளிலும் குறிப்பாக பாம்பு, குரங்கும் யானை, நாய், பூனை என இந்த விலங்குகளுக்கு இணையத்தில் அதிக கிரேஸ் உள்ளது. சமூக ஊடகங்களில் இவற்றின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன.
குரங்குகள் பொதுவாகவே குறும்புத்தனத்துக்கு பெயர்பெற்றவை. இவற்றின் குறும்புகள் பெரும்பாலும் வேடிக்கையாக இருந்தாலும், சில சமயம் சில ஆபத்துகளையும் விளைவிக்கின்றன. சில சமயம் இந்த குறும்புகள் குரங்குகளுக்கே கூட ஆபத்தாகி விடுவதுண்டு. அப்படி ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.
அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான ஆசை கண்டிப்பாக இருக்கும். இந்த ஆசை அனைத்து வித ஆபத்துகளிலிருந்து வெளிவருவதற்கான உறுதியை அளிக்கின்றது. இதை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது நமக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் அளிக்கின்றது.
முதலைகள் நிறைந்த குளத்தில் விழுந்த குரங்கு
இந்த வீடியோவில், முதலைகள் நிறைந்த குளத்தில் குரங்கு ஒன்று காணப்படுகிறது. முதலைகள் குரங்கை தாக்க அதன் பின்னால் ஓடுகின்றன, ஆனால் குரங்கு அதன் உயிரைக் காப்பாற்ற குளத்தின் உள்ளே குதிக்கத் தொடங்குகிறது. இந்த வீடியோவை பார்த்தால், பார்க்கும் அனைவருக்கும் பீதி பற்றிக்கொள்ளும், ஏனென்றால், டஜன் கணக்கான முதலைகள் நிறைந்த இந்தக் குளத்தில் இருந்து எவராலும் வெளியே வர இயலாது. ஆனால் குரங்கு தைரியத்தை இழக்காமல் முதலைகளின் பிடியில் இருந்து தப்பிக்கிறது.
மேலும் படிக்க | Viral Video: பின்னி பிணைந்திருந்த கருநாகங்கள்... நிம்மதியை கெடுத்த மனிதர்கள்!
முதலைகளின் குளத்தில் சிக்கிய குரங்கு
வீடியோவின் துவக்கத்தில் குரங்கு ஒன்று குளத்திற்குள் குதித்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. வீடியோவை பார்த்தால் குரங்கு தவறுதலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. ஆனால், குளத்தில் அத்தனை முதலைகள் இருக்கும் என குரங்குக்கு முதலில் தெரியவில்லை. ஆனால், குளத்தில் முதலைகளை பார்த்தவுடன் குரங்கு அங்கும் இங்கும் ஓடி குதிக்க ஆரம்பிக்கிறது. முதலைகளும் வசமாக மாட்டிய இரையை விட மனமில்லாமல் அதை பிடிக்க முயல்கின்றன.
ஆனால் குரங்கு வேகமாக குதித்து குளத்தின் சுவரில் ஏற முயற்சிக்கிறது. இந்த முயற்சியில் ஓரிரு முறை தோல்வியுற்று தண்ணீரில் விழுந்தாலும் எப்படியோ விடாமுயற்சியால் இறுதியாக அது முதலைகளின் பிடியில் இருந்து தப்பித்து விடுகிறது. தண்ணீரில் விழுந்த குரங்கு கண் இமைக்கும் நேரத்தில் மீண்டும் மேல் நோக்கி குதித்து விடுகிறது.
நம்ப முடியாத அந்த குரங்கு வீடியோவை இங்கே காணலாம்:
monawat_good) July 7, 2023
உயிர் பிழைத்தது குரங்கு
குரங்கின் உயிர் சிக்கலில் இருந்தது. குளத்தின் சுவரில் இருந்த பிளவுகள் அதற்கு உயிர் கொடுத்த கைகள் ஆயின. குரங்கு தண்ணீரில் விழுந்தவுடன், முதலைகள் அதை நோக்கி ஓடின. ஆனால் குரங்கு சுறுசுறுப்பைக் காட்டி சுவரை நோக்கி குதித்தது. சில முறை அதற்கு தோல்வி கிடைத்தாலும், அது முழு பலத்துடன் மீண்டும் குதித்தது. அதன் காரணமாக குளத்தின் சுவரில் இருந்த பிளவுகளை பிடிக்க முடிந்தது. பின் குரங்கு இன்னும் ஓரிரு தாவல்களில் குளத்திலிருந்து வெளியே சென்றது.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @monawat_good என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | முடியை பிடித்து இழுத்த குரங்கு, குழந்தையின் நிலை? பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ