சாமி பாட்டுக்கு செமயா குத்தாட்டம் போட்ட மணமக்கள்: வீடியோ வைரல்
Funny Wedding Video: மணமக்கள் நடனமாடத் தொடங்கிய பின்னர் அனைவரும் கண் கொட்டாமல் அவர்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நடன அசைவுகள் காண்பவர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருமண வீடியோக்களில் பல சுவாரசியமான விஷயங்களை காண முடிகின்றது. மணமக்கள் முதல் மணமக்களின் உறவினர்கள் என அனைவரும் பலவகைப்பட்ட உணர்ச்சிகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதை நாம் காண முடிகின்றது.
மேலும் படிக்க | போதையில் மாலையை மாற்றிப்போட்ட மணமகனுக்கு கிடைத்த அடி, உதை: வைரல் வீடியோ
நடனங்கள் இல்லாத திருமண வீடியோக்களை காண்பது மிக அரிதாகும். திருமணங்களில் பல வித நடனங்களை நாம் காண்கிறோம். இப்போது மீண்டும் ஒரு திருமண நடன வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில், மாலை மாற்றும் சடங்கு முடிந்த பின்னர், மணமக்களின் முன்னால், மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் சாமி பாடலுக்கு நடனமாடுவதை காண முடிகின்றது.
எனினும், யாருக்கு முன்னால் இவர்கள் நடனமாடுகிறார்களோ, அவர்களே மிகச்சிறந்த டான்சர்கள் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
குத்தாட்டம் போட்ட மணமகன் மணமகள்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாலை மாற்றும் சடங்கைத் தொடர்ந்து, திருமணத்தில் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதை காண முடிகின்றது. பலர் மணமக்களின் அருகில் வந்து நடனமாட ஆரம்பித்தனர். நடனமாடும் போது, சிலர் மணமக்களையும் நடனமாட அழைக்கின்றனர்.
முதலில் இருவரும் மறுத்தாலும் பின்னர் நடனம் ஆடுபவர்களுடன் சேர்ந்து ஆடத் தொடங்குகின்றனர். ஆனால், மணமக்கள் நடனமாடத் தொடங்கிய உடன் அனைவரும் கண் கொட்டாமல் அவர்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நடன அசைவுகள் காண்பவர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. யாராலும் அவர்களது நடனத்திலிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியவில்லை.
மணமக்களின் சாமி நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:
மணமக்களின் நடனத்தால் ஈர்க்கப்பட்ட இணையம்
மணமக்களின் நடனத்தைப் பார்த்து, திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் மட்டுமின்றி, இணையவாசிகளும் இவர்களது நடனத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடனம் தொடர்பான வீடியோ, weddingcouplepage என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR