வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருமணங்களில் பல வகையான சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றைப் பார்த்து சிரிப்பும் ஆச்சரியமும் ஏற்படுகின்றன. சில சமயம் மணமக்களின் நண்பர்கள் சில வேடிக்கையான செயல்களைச் செய்வதும், சில சமயங்களில் மணமக்களே பல வித காமெடி நடவடிக்கைகளை செய்வதும் இப்போது வாடிக்கையாகி விட்டது.
மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
அதுவும், மணமகன் குடித்துவிட்டு வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். குடிபோதையில் இருக்கும் மணமகன் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கில் மணமகன் மது அருந்திவிட்டு தன்னிலை இழந்தவராக இருப்பதை காண முடிகின்றது.
மாலை அணிவிக்கும் தருணம் வந்தவுடன், மணமகளுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக மணமகளின் தங்கைக்கு அனிவித்து விடுகிறார். பிறகென்ன? அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி ஏற்படுகிறது. மனமகளால் இதை நம்ப முடியவில்லை, மணமகளின் தங்கைக்கோ இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் பிறகு போதையில் மாலையை ஆள் மாறி அணிவித்த மாப்பிள்ளைக்கு திருமண மேடையிலேயே பலரது முன்னிலையில் அடி உதை கிடைக்கிறது.
மட்டையாகி மேடைக்கு வந்த மணமகன்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு திருமணம் நடந்துகொண்டிருப்பதை காண முடிகின்றது. மாலை மாற்றும் சடங்கின் போது மாப்பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். ஆனால் மாப்பிள்ளை மது அருந்திவிட்டு மேடையை அடைகிறார். அவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு நண்பர் அவரை மண மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு சில சடங்குகள் நடக்கின்றன. ஆனால், போதையில் மாப்பிள்ளை இருப்பதை பார்த்த மணமகளின் தங்கைக்கு கோவம் வருகிறது. அவர் மாப்பிள்ளையை திட்டிக்கொண்டே ஆரத்தி எடுக்கிறார்.
மாலை மாற்றும் சடங்கும் தொடங்குகிறது. மணமகள் முதலில் மணமகனுக்கு ஆரத்தி எடுக்கிறார். மாப்பிள்ளை சுயநிலைவிலேயே இல்லாத நிலையில், மணமகளுக்கு மாலை போடும்படி அவரிடம் கூறப்படுகிறது.
குடிபோதையில் உள்ள மாப்பிள்ளை தள்ளாடியபடியே மணமகளுக்கு பதில், அவரது தங்கைக்கு மாலை போட்டு விடுகிறார். இதனால் ஆவேசம் அடைந்த மணமகளின் தங்கை அவரை நன்றாக அடிக்கிறார். மணமேடை என்றும் பாராமல், மாப்பிள்ளையை அடித்து தீர்க்கிறார். மாப்பிள்ளையின் நண்பன் நடந்த தவறை அவருக்கு புரிய வைக்கிறார்.
வாங்கிய அடியில் போதை சற்று தெளிய மாப்பிள்ளைக்கு தனது தவறு புரிகிறது. வீடியோவில் இறுதியில் அவர் மன்னிப்பு கேட்பதையும் காண முடிகின்றது.
மேடையிலேயே அடி வாங்கிய மாப்பிள்ளையின் வீடியோவை இங்கே காணலாம்:
बिहार में शराबबंदी बाpic.twitter.com/MiWYfF2N2T
— Vikki1975 (@Vikki19751) June 21, 2022
மணமேடையில் மாப்பிள்ளைக்கு அடி உதை
இந்த வீடியோவில் மணமகளின் தங்கை கடுமையாக கோவம் கொண்டு மணமகனை அடிப்பதை காண முடிகிறது. அடிப்பதை நிறுத்துமாறு மணமகள் கூறினாலும் அவர் அதை கேட்பதாக இல்லை. மாப்பிள்ளையும் மௌனமாக அடியை வாங்கிக்கொள்கிறார்.
இந்த வீடியோ பீகாரில் ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது @Vikki19751 என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பார்க்கும் போது இது பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேலும் படிக்க | மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR