வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது செல்லப்பிராணிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் வாழ்வில் மறக்கமுடியாத பல தருணங்களை அவை நமக்கு அளிக்கின்றன. இவை நமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிடுகின்றன. செல்லப்பிராணிகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. செல்லப்பிராணிகளும் தாங்கள் வளர்க்கப்படும் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அபரிமிதமான பாசத்தை பொழிகின்றன. நாய்கள் அவற்றின் உரிமையாளர்களையும், குடும்பத்தில் பிற நபர்களையும் சாத்தியமான ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.


தற்போது பூனை ஒரு சிறு குழந்தையை காப்பாற்றும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. ஒரு அறையில் பூனை மற்றும் ஒரு குழந்தை இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது திடீரென்று குழந்தை படிக்கட்டுகளை நோக்கி தவழ்ந்து செல்கிறது.


குழந்தை படிக்கட்டுகளின் விளிம்பை அடையும் போது, பூனை மின்னல் வேகத்தில் குழந்தையை நோக்கி ஓடி, குழந்தைக்கு முன்னால் நின்று, அதை பின்நோக்கித் தள்ளுகிறது. இப்படி செய்து, குழந்தை படிக்கட்டுகளில் இறங்குவதைத் தடுக்கிறது. தவழும் வயதில் இருக்கும் அந்த குழந்தை, படிக்கடுகளில் தானாக இறங்கியிருந்தால், அது கீழே விழுந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன, சரியான நேரத்தில் பூனை குழந்தையை காப்பாற்றியது. அதுமட்டுமின்றி, குழந்தை மீண்டும் படிக்கட்டுகளில் செல்லாமல் இருக்கும்படி, பூனை அதன் முன் காவலாளி போல் அமர்ந்துவிடுகிறது.


மேலும் படிக்க | அடேங்கப்பா தில்ல பாத்தீங்களா! பாவம் அந்த விஷப் பாம்புகள்: வீடியோ வைரல்


காவல் தெய்வமாய் மாறிய பூனையின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ ட்விட்டரில் Animals Being Bros @AnimalBeingBro5 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


'வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் நமக்கு அன்பு உண்டு. ஆனால், அவற்றுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது' என ஒரு பயனர் எழுதி உள்ளார்.


'இது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு எச்சரிக்கை. குழந்தைகள் விஷயத்தில் அதிகபட்ச கவனம் தேவை' என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்லார். 


மேலும் படிக்க | ’ஆஸ்கர் விருது என் கிட்ட கொடுங்கப்பா’ செத்த மாதிரி நடித்து தப்பிக்கும் வாத்து: வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ