கேட்வாக் என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பேஷன் ஷோவில் மாடல்கள் நடந்து வரும் நடைதான்.  ஆனால் இங்கு உண்மையான கேட்  செய்யும் வாக் தான் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  ஒரு ஆய்வின்படி பொதுவாக பூனைகளை செல்ல பிராணியாக வளர்ப்பவர்களை 90% இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் எதுவும் தாக்காது என்று கூறுகிறது.  பூனைகளின் குறும்புகள் சில பலராலும் ரசிக்கப்படுகிறது, அப்படி ஒரு ரசிக்கும்படியான செயல் தான் இணையத்தை கலக்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நொடியில் திசை மாறிய அதிர்ஷ்ட காற்று!


சமூக வலைத்தளமான ட்விட்டரில் டாக்டர்.சம்ராத் கவுடா என்பவரால் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவில், உயரமான ஒரு சுவரில் நீளமாக மற்றும் கூர்மையான முனைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு அதன் முனையில் கவை போன்ற வடிவத்தில் கம்பிகள் வரிசையாக பொருத்தப்பட்டு உள்ளது.  அந்த வரிசையான கம்பியில் கொழு கொழு பூனை ஒன்று அழகாக கேட்வாக் செய்வது போல் பொறுமையாக நடந்து செல்கிறது.  அந்த வெள்ளை நிற பூனையின் உடலில் சாம்பல் நிறமும், பழுப்பு நிறமும் கலந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.


 



இந்த வீடியோவுடன் அவர் 'இதன் பெயர் தான் கேட்வாக்' என்று கேப்ஷனாக சேர்த்து பதிவிட்டு இருக்கிறார்.  இந்த வீடியோ பூனை பிரியர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களையும் ரசிக்கும்படியாக செய்து இருக்கிறது.  இதுவரை இணையத்தில் இந்த வீடியோவை அறுபத்தி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  இதில் ஒரு பயனர், 'பூனைகளுக்கு கண்கள் மட்டுமன்றி உடல் உறுப்பு அனைத்திலும் சிறந்த உணர்திறனை கொண்டு இருக்கிறது, இது ஒரு அருமையான உயிரினம்' என்று கருது தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோவை பலரும் லைக் செய்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.


மேலும் படிக்கவும் | பதட்டத்தின் உச்சக்கட்டம்: நாகப்பாம்பிடம் சிக்கிய பாம்பு...உயிர் பிழைக்குமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR