நொடியில் திசை மாறும் அதிர்ஷ்ட காற்று! முதலை வாயிலிருந்து தப்பினாலும் சிறுத்தையாய் வந்த எமன்

அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றலாம், நீங்கள் நம்பவில்லை என்றால் இந்த வீடியோவை பாருங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2022, 08:13 AM IST
  • அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றலாம்
  • நொடியில் திசை மாறும் அதிர்ஷ்ட காற்று!
  • முதலை வாயிலிருந்து தப்பினாலும் சிறுத்தையாய் வந்த எமன்
நொடியில் திசை மாறும் அதிர்ஷ்ட காற்று! முதலை வாயிலிருந்து தப்பினாலும் சிறுத்தையாய் வந்த எமன் title=

Animal Video: இந்த கணத்தில் வாழுங்கள், இந்த நொடி மட்டுமே உங்களுக்கு சொந்தம் என்பது அறிவுரையாக இருந்தாலும், கசப்பான உண்மை அதுதான். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் இருப்பது நொடிப் பொழுதே.

அதிர்ஷ்டம் என்பது ஒற்றை விநாடியில் துரதிருஷ்டமாக மாறலாம்.  எந்த நேரத்திலும் அதிர்ஷ்டம் நம்மை ஏமாற்றலாம். அதற்கு உதாரணமாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றை சொல்லலாம்.

இந்த வீடியோவில் அதிர்ஷ்டவசமாய் உயிர் பிழைத்த மான்குட்டி ஒன்று, அடுத்த நொடியே சிறுத்தைக்கு பலியாவதை காணலாம். வீடியோவின் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இறுதியில் வருத்தமே மிஞ்சுகிறது.

வாழ்வா சாவா என்பது நொடிப்பொழுது என்பதைப் போலவே, மகிழ்ச்சியும் துக்கமும் மாறுவதும் ஒற்றை நொடியில் தானே?  

மேலும் படிக்க | வைரல் வீடியோ: ஆம்லெட் போடும்போது முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு, ஷாக் ஆன மக்கள் 

காடுகளில் வேட்டைக்கார விலங்குகள் நிறைந்துள்ளன, சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் மிகவும் ஆபத்தானவை. தற்செயலாக ஏதேனும் சிறு விலங்குகள் எதிரில் வந்தால் அது ஒரு தரப்புக்கு இரை என்றால், மறு தரப்புக்கு மரணம். 

அதேபோல, தாகத்தை தீர்த்துக் கொள்ள விலங்குகள் தண்ணீர் பருக சென்றாலும், அங்கும் காத்திருக்கிறது கண்டம். நீர்நிலையில் இருக்கும் முதலை, தனது பசித்தாகத்தைப் போக்க, நீர் பருக வந்த விலங்குகளை ஸ்வாஹா செய்துவிடுகிறது.

முதலைகள் தண்ணீரின் ராஜா என்று அழைக்கப்படுகின்றன. தண்ணீருக்கு அடியில், மிகப்பெரிய விலங்குகளையும் இரையாக மாற்றும் முதலைக்கு, சிறிய மான்குட்டி எம்மாத்திரம்?

மேலும் படிக்க | Viral Video: சிங்கிளாக வந்த சிங்கம்; வேட்டையாடியதா; விட்டுச்சென்றதா! 

ஆனால், தண்ணீரின் ராஜாவிடம் இருந்து லாவகமக தப்பித்த மான் குட்டியை இந்த வைரல் வீடியோவில் பார்க்கலாம். ஒரு ராட்சத முதலை தண்ணீரில் இறங்கிய மான்குட்டியை இரையாக்க முயற்சிப்பதை காணலாம். மான் குட்டியை தண்ணீருக்குள் இழுத்து செல்கிறது.

இந்த இடத்தில் பரிதாபமாக உயிரிழக்க இருந்த மான், முதலையின் பிடி ஒரு கணம் நழுவியதை பயன்படுத்தி, லாவகமாக வெளியே வந்தது அதன் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.  

ஆனால், அந்த அதிர்ஷ்டக் காற்று உடனடியாக சிறுத்தைக்கு திரும்பிவிட்டது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WILDMA (@wildmaofficial)

நீரிலிருந்து வெளியே வந்தவுடனேயே மானை இரையாக்க ஒரு சிறுத்தை காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நொடிப் பொழுதில் மாறும் அதிர்ஷ்டத்தைப் பார்க்கலாம். 

முதலையின் கணக்கு தப்பினாலும் காலனின் கணக்கு தப்பாது என்பதை உணர்த்துகிறது இந்த வைரல் வீடியோ. தண்ணீரில் இருந்து வெளியே வந்த  மான் குட்டியின் மீது சிறுத்தை ஒன்று பாய்ந்து அதை இரையாக ஆக்குகிறது.

சிறுத்தை ஏற்கனவே புதருக்கு பின்னால் பதுங்கி இருந்தது. இந்தக் காட்சியைக் கண்டால் உள்ளம் நடுங்கும். இன்ஸ்டாகிராமில் Wildmaofficial என்ற கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | நாகப்பாம்பிடம் சிக்கிய பாம்பு...உயிர் பிழைக்குமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News