Chennai Rains Viral Video : தமிழகத்தின் வடக்கு பகுதியிலும், ஆந்திராவின் தெற்கு பகுதியிலும் புயல் மையம் கொண்டுள்ளதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னைக்கு, நேற்றும் இன்றும் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் படிப்படியாக தொடங்கிய மழை, தற்போது கனமழையாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக, பள்ளி-கல்லூரிகளுக்கு சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஐடி ஊழியர்களுக்கு வர்க்-ஃப்ரம்-ஹோம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து, பல நிறுவனங்கள் அதை இன்று பின்பற்றியுள்ளன. இந்த சமயத்தில் சென்னையில் அதிகாலை முதல் மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மழை நீர் வெள்ளம் போல தேங்கிநிற்க ஆரம்பித்து விட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறுந்து விழுந்த மின்கம்பி: 


முன்பு போல அல்லாமல், மழை பெய்யும் முன்னரே மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் முன்கூட்டியே தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க ஆரம்பித்து விட்டனர். மழையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளதை ஒட்டி, மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.