எச்சரிக்கை! சென்னையை அடுத்து இந்த மாவட்டங்களிலும் புயல் வரலாம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை மற்றும் அதீத கனமழை இருப்பதால் இன்று ஆரஞ் அலர்ட், நாளை ரெட் அலர்ட் மற்றும் நாளை மறுநாள் ஆரஞ் அலர்ட் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 15, 2024, 02:58 PM IST
  • சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.
  • 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
  • பிற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.
எச்சரிக்கை! சென்னையை அடுத்து இந்த மாவட்டங்களிலும் புயல் வரலாம்!  title=

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இன்னும் அதிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை பெரம்பூர் ரயில்வே மேம்பாலம் அடியில் உள்ள சுரங்கப் பாதையில் முழுவதுமாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவளியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் உள்ள செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். தற்போது மேம்பாலம் ஆனது முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக பயணிக்க முடியாமல் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் படிக்க | Red Alert என்றால் என்ன? மழை காலங்களில் இது கொடுக்கப்படுவது ஏன்?

தமிழகத்தில் காற்றழுத்த சுழற்சி மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக கனத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 187.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரிகள், குளங்கள், நீர் வரத்து கால்வாய், நீர் வெளியேறும் கால்வாய் என அனைத்து நிலை பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மேலும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக்ஜேக்கப் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏரி கரையில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார், இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் வேங்கிக்கால், கிளியாபட்டு, சானானந்தல், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் சண். இராமநாதன். 800 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 ஜேசிபி வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 100 என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதியில் உடனடியாக மீட்பு பணிக்கு செல்வதற்கு வசதியாக அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் பணியாளர்கள் தங்கி பணிகளை செய்து வருகின்றனர். உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனே அவர்கள் விரைந்து சென்று பணிகள் செய்வார்கள்.  24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். 

வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு என  அதிகளவில் ஆற்று பகுதிகள் உள்ளதால் எவ்வளவு பெரிய மழை வெள்ளம் வந்தாலும் உடனே ஆற்றில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் மாமன்னர் இராஜராஜ சோழன் நடவடிக்கை எடுத்தார்.  அதனை பின்பற்றி அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.

மேலும் படிக்க - தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News