சினேகாவுக்கு எக்ஸ்பிரசனில் டஃப் கொடுக்கும் சுட்டிக் குழந்தை - வைரல் வீடியோ
சினேகா திரைப்பட பாடலை அழகான எக்பிரஷனுடன் பாடிய குழந்தையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையவாசிகளை மயக்கிய குழந்தை
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிடும் ஆர்வம் பெரியவர்கள் கூட இருக்காது. அந்தளவுக்கு ஆக்டிவாக இருக்கும் குழந்தைகள் ஷார்ட்ஸ் யூடியூப் வீடியோக்கள் எடுத்துபோட்டு லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிக்கின்றனர். மேலும் தங்கள் வீட்டில் செய்யும் சில வேடிக்கை நிறைந்த சம்பவங்கள் கூட இணையத்தில் வைரல் வீடியோவாக பகிரப்படுகிறது.
மேலும் படிக்க | Viral Video: இது தான் ஃபுல் டாஸா... காட்டு பன்றியை தூக்கி எறிந்த காண்டாமிருகம்...!
சினேகா பாடலை பாடிய குழந்தை
அந்த வகையில், சுமார் 4 வயது மதிக்கதக்க குழந்தையொன்று சினேகா திரைப்பட பாடலை அழகான எக்பிரஷனுடன் பாடியுள்ளது. மேலும் அதன் வரிகளை கேட்டு அதற்கு மெட்டு கட்டுவது போல் எக்பிரஷனை கொடுக்கிறது. இதனை பார்க்கும் போது அந்த குழந்தைக்கு பாடல்கள் மீதுள்ள அதீத நாட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் இந்த கியூட்டான எக்ஸ்பிரஸ்சன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள் செம கியூட்டாக எக்ஸ்பிரசன் காட்டுறியே யாருமா நீ என கேட்டு வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு தான் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குள் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. கியூட்டான இந்த வீடியோ வைரல் லிஸ்டில் இடம்பெறவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ’விபத்திலும் ஒரு அதிர்ஷ்டம்’ ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த ஊழியர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ