Viral Video: இது தான் ஃபுல் டாஸா... காட்டு பன்றியை தூக்கி எறிந்த காண்டாமிருகம்...!

காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுகிறது. வைரலாகும் வீடியோக்களில், சிங்கங்கள், சிறுத்தைகள் என பல்வேறு விலங்குகளின் வீடியோக்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2023, 07:24 PM IST
  • வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ளது காண்டாமிருகம்.
  • அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை.
  • காண்டாமிருகத்தின் கர்ப்பக் காலம் 15 முதல் 16 மாதங்கள்.
Viral Video: இது தான் ஃபுல் டாஸா... காட்டு பன்றியை தூக்கி எறிந்த காண்டாமிருகம்...! title=

வன வாழ்க்கை வல்லவன் வாழ்வான் என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையவாசிகளால் மிகவும் விரும்பப்படுகின்றன. காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். வைரலாகும் வீடியோக்களில், சிங்கங்கள், சிறுத்தைகள் என பல்வேறு விலங்குகளின் வீடியோக்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் விலங்குகளை வேட்டையாடும் வீடியோ வைரலாகும், சில சமயங்களில் இரு விலங்குகளின் மல்யுத்தம் மலைக்க வைக்கும். அந்த வகையில் தற்போது காண்டா மிருகம் தொடர்பான வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது

சில நேரங்களில் இரண்டு விலங்குகள் ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிவது வைரலானால், சில சமயங்களில் காதலுக்காக வீரப் போட்டி நடத்துவதையும் பரவலாக பார்த்து ரசிக்கிறோம். தற்போது, யானை மற்றும் காண்டாமிருகம் போட்டுக் கொள்ளும் மூர்க்கத்தனமான சண்டை வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகியுள்ளது.

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் காண்டாமிருகங்கள்தான். மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டாமிருகத்துக்கு உண்டு.  இவ்வலவு பலம் பொருந்திய காண்டாமிருகத்திற்கு, வார்தாக் (warthog) என்ற பெரிய தந்தங்கள் உடைய ஆப்பிரிக்கக் காட்டுப் பன்றி வகையுடன் ஏற்பட்ட மோதல் மிகவும் வைரலாகியுள்ளது. இங்கு பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு காண்டாமிருகம் புல் குவியலை உண்ணுவதையும், அதனுடன் சேர்ந்து, இரண்டு வார்தாக்களும் அதிலிருந்து சாப்பிடுவதையும் காட்டுகிறது. திடீரென்று, காண்டாமிருகம், தன பங்கிற்கு கேடு வந்து விட்டது என நினைத்ததோ என்னவோ,  இரண்டு வார்தாக்களில் ஒன்றைத் தூக்கி தூக்கி எறிகிறது. வார்தாக் நல்ல உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டு பூமியில் மோதி விழுகிறது.

மேலும் படிக்க | ‘தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. கருப்பு, வெள்ளை, ஒற்றைக் கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா என காண்டாமிருகங்களில் 5 வகைகள் உள்ளன.

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் காண்டாமிருகங்கள்தான். அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை. காண்டாமிருகம் 6 அடி உயரம் வரை வளரும். காண்டாமிருகங்கள் சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. காண்டாமிருகத்தின் கர்ப்பக் காலம் 15 முதல் 16 மாதங்கள். பெண் காண்டாமிருகம் இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும். பிறந்த காண்டாமிருகம் கன்றானது 40 முதல் 64 கிலோ வரை எடை இருக்கும்.

மேலும் படிக்க | வெறித்தனமான சண்டை..ராட்சத மலைப்பாம்பை பதம் பார்த்த காட்டு ராஜா:திக் திக் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News